Published : 13 Oct 2021 05:49 AM
Last Updated : 13 Oct 2021 05:49 AM

பழம்பெரும் தமிழ் நடிகர் காந்த் காலமானார் : முதல்வர், திரையுலகினர் இரங்கல்

பழம்பெரும் நடிகர் காந்த் நேற்று காலமானார். அவருக்கு வயது 82.

ஈரோடு பகுதியை பூர்வீகமாககொண்டவர் காந்த். சென்னைஅமெரிக்க தூதரகத்தில் பணியாற்றியபோது, நாடகங்களில் ஆர்வம் சென்றதில், பாலசந்தரின் அறிமுகம் கிடைத்தது. 1965-ல் தரின்‘வெண்ணிற ஆடை’ படத்தில்அறிமுகமானார். தொடர்ந்து, பாலசந்தரின் ‘மேஜர் சந்திரகாந்த்’, ‘எதிர்நீச்சல்’, ‘பாமா விஜயம்’ என பலபடங்களில் நடித்தார்.

ஏராளமான திரைப்படங்களில் சிவாஜி, முத்துராமன், ஜெய்சங்கர்போன்ற நடிகர்களோடு துணை பாத்திரங்களில் நடித்தார். பின்னர், ரஜினி, கமல் போன்ற நடிகர்களுக்கு வில்லனாக நடித்தார்.

இவர் கதாநாயகனாக நடித்து 1974-ல் வெளிவந்த ‘திக்கற்ற பார்வதி’ திரைப்படம் சிறந்த தமிழ் திரைப்படத்துக்கான தேசிய விருதுபெற்றது. அதேபோல, சிவாஜியின் மகனாக இவர் நடித்த ‘தங்கப் பதக்கம்' திரைப்படம், ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தது.

சென்னையில் வசித்துவந்த காந்த் கரோனா தொற்றுக்குஆளாகி சிகிச்சை பெற்று மீண்டநிலையில் உடல்நலக் குறைவுஏற்பட்டு நேற்று காலமானார்.

இறுதிச் சடங்குகள் நேற்றுமாலை நடந்தன. அவருக்குமனைவி, மகள் உள்ளனர்.

காந்த் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி உள்ளிட்ட தலைவர்கள், திரையுலகினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x