Published : 13 Oct 2021 05:49 AM
Last Updated : 13 Oct 2021 05:49 AM

நிலக்கரி தட்டுப்பாடு - அவசர திட்டத்தை செயல்படுத்த ராமதாஸ் வலியுறுத்தல் :

பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்றுவெளியிட்ட அறிக்கை: இந்தியாவில் நிலக்கரித் தட்டுப்பாடு அபாயகட்டத்தை எட்டிவிட்டதற்கான அறிகுறிகள் தென்படத் தொடங்கிவிட்டன.

வெளிநாடுகளில் உற்பத்திக்குறைவு காரணமாக நிலக்கரிவிலை கணிசமாக உயர்ந்துள்ளது.இந்தியாவில் உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது. இந்தியாவில் மொத்தமுள்ள 135 அனல்மின்நிலையங்களில் சுமார் 80 சதவீதம்அதாவது 106 அனல் மின் நிலையங்களில் இருப்பில் உள்ள நிலக்கரி 5 நாட்களுக்கு மட்டுமே வரும்என புள்ளி விவரங்கள் கூறுகின்றன. அதுமட்டுமின்றி, மராட்டியத்தில் 13 அனல்மின் நிலையங்களும், பஞ்சாபில் 3 அனல் மின் நிலையங்களும் நிலக்கரி தட்டுப்பாட்டால் மூடப்பட்டிருக்கின்றன. கேரளம்,கர்நாடகம், மத்தியப்பிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்களில் மின்னுற்பத்தி பாதிக்கப்பட்டிருக்கிறது. பலமாநில அரசுகள் அடுத்த சில நாட்களில் கடுமையான மின் தட்டுப்பாடுஏற்படும் என்பதால் நிலைமையை சமாளிக்கத் தயாராக இருக்கும்படி மக்களை கேட்டுக் கொண்டுள்ளன.

தமிழகத்தில் 2.40 லட்சம் டன் நிலக்கரி கையிருப்பு உள்ளதாகவும், நாளொன்றுக்கு 56 ஆயிரம் டன் நிலக்கரி தேவைப்படும் நிலையில் 60,000 டன் நிலக்கரி வந்து கொண்டிருப்பதாகவும் தெரிவித்துள்ள மின்சாரத்துறை அமைச்சர், அதனால் தமிழகத்தில் ஒரு விநாடி கூட மின்வெட்டு ஏற்பட வாய்ப்பில்லை என்றும் தெரிவித்துள்ளார். அமைச்சரின் விளக்கம் நம்பிக்கையளிக்கும் வகையில் இருந்தாலும் கூட, கள நிலைமையை கருத்தில் கொண்டு, நிலக்கரித் தட்டுப்பாடோ, அதனால் மின்சாரத் தட்டுப்பாடோ ஏற்பட்டால், அதை சமாளிப்பதற்கான அவசர காலத் திட்டத்தைதயாரித்து தமிழக அரசு செயல்படுத்த வேண்டும். மின்வெட்டு ஏற்படாமல் இருப்பதை தமிழக அரசும்,தமிழ்நாடு மின் வாரியமும் உறுதிசெய்ய வேண்டும் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x