Published : 13 Oct 2021 05:50 AM
Last Updated : 13 Oct 2021 05:50 AM

பட்ஜெட்டில் அறிவித்ததை செயல்படுத்தாவிடில் போராட்டம் : புதுவையில் மீனவர் சங்கம் அறிவிப்பு

பட்ஜெட்டில் அறிவித்த அறிவிப்பை செயல்படுத்தாவிட்டால் போராட்டம் நடத்துவோம் என்று அகிலஇந்திய மீனவர் சங்கம் அறிவித் துள்ளது.

அகில இந்திய மீனவர் சங்க பொதுச் செயலாளர் தணி காசலம், உயர்நிலை குழுத் தலைவர் எத்திராஜ் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

வயது முதிர்ந்த மீனவர் உதவித்தொகையை ரூ.500 உயர்த்தி முதல்வர் ரங்கசாமி அறிவித்தார். பட்ஜெட்டிலும் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஆனால் உதவித்தொகை உயர்த்திவழங்கப்படவில்லை. புதிதாகவிண்ணப்பித்து 2 ஆண்டுகளாகியும் உதவித்தொகை வழங்கப் படவில்லை. இதை நம்பியுள்ள முதியவர்கள் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர்.

சமூகநலத்துறை சார்பில் மாதந்தோறும் முதல் வாரத்தில் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் மீனவர் நலத்துறை ஒரு மாதம்கூட சரியான நேரத்தில் வழங்குவதில்லை. இதற்கு மீன்வளத்துறையின் அலட்சியம்தான் காரணம்.

உதவித்தொகை உயர்வு

ஆண்டுதோறும் 10, 12-ம்வகுப்பில் 75 சதவீதத்துக்கு மேல்மதிப்பெண் எடுக்கும் மாணவர்களுக்கு ரூ.5 ஆயிரம், ரூ.7 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படுகிறது.

இந்த ஆண்டு 70 சதவீதம் மதிப்பெண் பெற்றால் போதும் என்றும், உதவித்தொகை ரூ.7 ஆயிரம், ரூ.15 ஆயிரம் என உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த ஆண்டுக்கான விண்ணப்பம்கூட வழங்கவில்லை.

பட்ஜெட்டில் அறிவித்த அறிவிப்புகளை செயல்படுத்த வேண்டும். இல்லையெனில் போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x