Published : 13 Oct 2021 05:50 am

Updated : 13 Oct 2021 05:50 am

 

Published : 13 Oct 2021 05:50 AM
Last Updated : 13 Oct 2021 05:50 AM

நத்தம் வட்டாட்சியர் அலுவலகம் முன் : குடும்பத்துடன் தீக்குளிக்க முயன்ற பெண் :

நத்தம்: விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே கீழ்ப்புத்துப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் மனோரஞ்சிதம் (50). இவரது பெயரிலும், இவரது சகோதரர் பெயரிலும் திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே மணக்காட்டூர் கிராமத்தில் நிலம் உள்ளது. இந்த நிலத்தை அருகில் உள்ள வீராச்சாமி, பொன்னையா ஆகியோர் ஆக்கிரமித்துக் கொண்டதாகக் கூறப்படுகிறது. தனது நிலத்தை நீதிமன்ற உத்தரவுப்படி அளந்து தர வேண்டும் என மனோரஞ்சிதம் பலமுறை கோரிக்கை வைத்திருந்தார். வருவாய்த் துறையினர் முறையாக அளந்து தரவில்லை எனக் கூறி நேற்று மாலை நத்தம் வட்டாட்சியர் அலுவலகத்தில் மனோரஞ்சிதம் தனது குடும்பத்துடன் உடலில்

இது தொடர்பாக தகவலறிந்து வந்த போலீஸார், டீசல் கேனை பறித்து தடுத்தனர். பின்னர் அவர்களை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.




Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

அரண்மனை 3 :

இன்றைய செய்தி

More From this Author

x