Published : 13 Oct 2021 05:50 AM
Last Updated : 13 Oct 2021 05:50 AM

விருதுநகர், திண்டுக்கல், தேனி மாவட்ட உள்ளாட்சி தேர்தலில் - பெரும்பாலான இடங்களில் திமுக வெற்றி :

விருதுநகர் செந்திக்குமார நாடார் கல்லூரியில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை.

விருதுநகர்

விருதுநகர், திண்டுக்கல், தேனி மாவட்ட உள்ளாட்சித் தேர்தலில் பெரும்பாலான இடங்களில் திமுக வெற்றி பெற்றது.

விருதுநகர் மாவட்டத்தில் 1 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பி னர், 3 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், 4 கிராம ஊராட்சித் தலைவர்கள், 17 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங்கள் என மொத்தம் 25 பதவிகளுக்கு கடந்த 9-ம் தேதி தேர்தல் நடைபெற்றது.

மாவட்டத்தில் 9 மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.

இதில் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 6 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். அவர்களில் திமுக வேட்பாளர் பகவதி வெற்றி பெற்றார். 3 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தலில் ராஜபாளையம் ஊராட்சி ஒன்றியம் 13-வது வார்டில் திமுக வேட்பாளர் காமராஜ், 15-வது வார்டில் இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் பகத்சிங், விருதுநகர் ஊராட்சி ஒன்றிய 12-வது வார்டில் திமுக வேட்பாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் வெற்றி பெற்றனர்.

காரியாபட்டி அருகே உள்ள அழகியநல்லூர் ஊராட்சித் தலைவராக ரவிச்சந்திரன், நரிக்குடி அருகே உள்ள உளுத்திமடை ஊராட்சித் தலைவராக ரேவதி, திருச்சுழி அருகே உள்ள என்.முக்குளம் ஊராட்சித் தலைவராக இப்ராகிம், விருதுநகர் அருகே உள்ள பாவாலி ஊராட்சித் தலைவராக அழகம்மாள் வெற்றி பெற்றனர். மேலும் 17 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் களும் அறிவிக்கப்பட்டனர்.

திண்டுக்கல்

திண்டுக்கல் மாவட்டத்தில் காலியாகவுள்ள இரண்டு ஊராட்சி ஒன்றிய உறுப்பினர்கள், இரண்டு ஊராட்சித் தலைவர்கள், 9 ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கான தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன.

இதில் நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், எத்திலோடு பகுதி ஒன் றிய உறுப்பினராக திமுகவைச் சேர்ந்த தியாகு 723 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட் பாளரை தோற்கடித்தார். பழநி ஊராட்சி ஒன்றியம் ஆண்டிபட்டி பகுதி ஒன்றிய உறுப்பினராக திமுகவைச் சேர்ந்த ராமராஜ் வெற்றி பெற்றார். இவர் 2,990 வாக்குகள் பெற்றார். அதிமுகவை சேர்ந்த மணிகண்டன் 521 வாக்குகள் மட்டுமே பெற்றார்.

கொடைக்கானல் ஒன்றியம் வில்பட்டி ஊராட்சித்தலைவர் தேர்தலில் பாக்கியலட்சுமி வெற்றி பெற்றார். ஒட்டன்சத்திரம் ஒன்றியம் சத்திரப்பட்டி ஊராட்சித் தலைவர் பதவிக்கான தேர்தலில் சாரதா வெற்றி பெற்றார். மேலும் ஒன்பது ஊராட்சி உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

தேனி

தேனி மாவட்ட உள்ளாட்சி களில் காலியாக உள்ள 5 பதவி களுக்கான தேர்தல் கடந்த 9-ம் தேதி நடைபெற்றது. ஆண்டிபட்டி, போடி ஆகிய ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் நேற்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.

இதில் ஆண்டிபட்டி ஒன்றிய 19-வது வார்டில் ஜெயா (திமுக), க.மயிலாடும்பாறை ஒன்றிய 8-வது வார்டில் ரா.கருப்பையா (திமுக) ஆகியோர் வெற்றி பெற்றனர். கதிர்நரசிங்கபுரம் ஊராட்சி தலைவராக முருகலட்சுமி தேர்வு செய்யப்பட்டார். ஆண்டிபட்டி அருகே ராஜதானி 3-வது வார்டில் த.பாப்பா, போடி அருகே நாகலாபுரம் ஊராட்சி 4-வது வார்டில் பெருமாள் ஆகியோர் வெற்றி பெற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x