Published : 13 Oct 2021 05:50 AM
Last Updated : 13 Oct 2021 05:50 AM

ஒகேனக்கல்லில் சுற்றுலாத் துறை அமைச்சர் இரண்டாவது நாளாக ஆய்வு :

தருமபுரி: தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் சுற்றுலா தலத்தை மேம்படுத்துவது தொடர்பாக சுற்றுலாத் துறை அமைச்சர் 2-வது நாளாக நேற்றும் ஆய்வு மேற்கொண்டார்.

பென்னாகரம் வட்டம் காவிரி ஆற்றங்கரையில் அமைந்துள்ள ஒகேனக்கல் சுற்றுலாத் தலத்தை, சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் மேம்படுத்துவது தொடர்பாக தமிழக சுற்றுலாத் துறை அமைச்சர் மதிவேந்தன் நேற்று முன் தினம் ஒகேனக்கல்லில் நேரில் ஆய்வு மேற்கொண்டார். இந்நிலையில், 2-வது நாளாக நேற்று அவர் ஒகேனக்கல்லில் பல்வேறு இடங்களில் ஆய்வு நடத்தினார். நேற்று ஒகேனக்கல் மீன் சந்தை, முதலைப் பண்ணை, மீன் பண்ணை, ஊட்டமலை பரிசல் துறை, வண்ண மீன் காட்சியகம், தமிழ்நாடு சுற்றுலா விடுதியின் அறைகள் மற்றும் உணவகங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நேற்று ஆய்வு நடத்தினார்.

ஆய்வின்போது, மாவட்ட ஆட்சியர் திவ்யதர்சினி, தருமபுரி எம்பி செந்தில்குமார், பென்னாகரம் எம்எல்ஏ ஜி.கே.மணி, கூடுதல் ஆட்சியர் மற்றும் ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர் மருத்துவர் வைத்திநாதன், முன்னாள் எம்எல்ஏ.க்கள் இன்பசேகரன், தடங்கம் சுப்பிரமணி, மாவட்ட சுற்றுலா அலுவலர் பாலமுருகன், பென்னாகரம் வட்டாட்சியர் பாலமுருகன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வடிவேலன், ஜெகதீசன் உள்ளிட்ட பலரும் உடனிருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x