Published : 13 Oct 2021 05:50 AM
Last Updated : 13 Oct 2021 05:50 AM

கூட்டுறவு சங்கங்களுக்கு 400 டன் யூரியா :

திருச்சி: திருச்சி மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ஜெயராமன் கூறியிருப்பதாவது:தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இணையம் மூலம் திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களுக்கும் 400 டன் யூரியா அனுப்பி வைக்கும் பணி நடைபெற்று வருகிறது. ஒரு மூட்டை யூரியாவின் ரூ.266.50 ஆகும். எனவே விவசாயிகள் தங்கள் கிராமத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தை தொடர்பு கொண்டு தங்களுக்கு தேவையான உரங்களை வாங்கிக் கொள்ளலாம் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x