Published : 13 Oct 2021 05:51 AM
Last Updated : 13 Oct 2021 05:51 AM

நாகை மீன்வளப் பல்கலைக்கழகத்தில் - இளநிலை பட்டப்படிப்புகளுக்கு அக்.22 முதல் முதல்கட்ட இணைய தள கலந்தாய்வு :

நாகையில் உள்ள தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகத்தின் இளநிலை பட்டப்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை விண்ணப்பங் கள் இணைய தளத்தில் ஆக.19-ம் தேதி வெளியிடப்பட்டது.

இள நிலை மீன்வள அறிவியல், பி.டெக். பட்டப் படிப்பு, இளநிலை வணிக மேலாண்மை, இளநிலை தொழில்நுட்பவியல் என மொத்தம் 395 இடங்கள் கொண்ட இளநிலை பட்டப் படிப்பு களுக்கு 7,583 விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

இப்பட்டப் படிப்புகளில் சேர்வ தற்கான தரவரிசைப் பட்டியலை நேற்று முன்தினம் நாகை மீன்வளப் பல்கலைக்கழக துணைவேந்தர் சுகுமார் இணையதளத்தில் வெளியிட்டு தெரிவித்தது, திருவண்ணாமலையைச் சேர்ந்த மாணவி சைனி பிரதாப் 198 மதிப் பெண்கள் பெற்று முதலிடமும், ராமநாதபுரத்தைச் சேர்ந்த மாணவி இந்துஜா 2-ம் இடமும், திருச்சியைச் சேர்ந்த மாணவர் கிரிஜெயந்தன் 3-ம் இடமும் பெற் றுள்ளனர்.

5 சிறப்பு பிரிவினர்களுக்கான (விளையாட்டு வீரர், முன்னாள் ராணுவத்தினரின் குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள், மீனவ குழந் தைகளுக்கான சிறப்பு பிரிவு மற்றும் 6 முதல் 12-ம் வகுப்பு வரை அரசுப் பள்ளியில் படித்த மாணவர்கள்) நேரடி கலந்தாய்வு அக்.21-ம் தேதி நாகை தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக் கழகத்தில் நடைபெற உள்ளது.

மேலும், முதல்கட்ட இணைய தள பொது கலந்தாய்வு அக்.22-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை நடைபெற உள்ளது என தெரி வித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x