Published : 13 Oct 2021 05:51 AM
Last Updated : 13 Oct 2021 05:51 AM

குளத்தை தூர்வார வலியுறுத்தி பாஜக காத்திருப்பு போராட்டம் :

கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் பாஜக வினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நாலாட்டின்புதூர் மந்தைகுளத்தை தூர்வாரி குப்பைகளைஅகற்ற வேண்டும். பாண்டவர்மங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட இ.பி. காலனி பிரதான சாலையை சீரமைத்து தார்சாலை அமைக்க வேண்டும். ஆனந்த நகர், எஸ்.எஸ். நகர், குறுக்குத் தெருவில் பேவர் பிளாக் சாலை அமைக்க வேண்டும். நரியூத்து கண்மாயை தூர்வாரி நந்தவனம் அமைக்க வேண்டும். பாண்டவர்மங்கலம் துணை சுகாதார நிலையத்தை ஆரம்ப சுகாதார நிலையமாக தரம் உயர்த்தி, பழைய கட்டிடத்தை புதுப்பிக்க வேண்டும்.

மந்தித்தோப்பில் வாறுகால் வசதி, மின் வசதி, சாலை வசதிஏற்படுத்தி தர வேண்டும். மகாத்மாகாந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் 50 வயதுக்கு மேற்பட்டவர்களை அனுமதிக்க வேண்டும். ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் அனைத்து கிராமத்துக்கும் குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

போராட்டத்துக்கு பாஜக தெற்குஒன்றிய பொறுப்பாளர் மாரிமுத்து தலைமை வகித்தார். மாவட்ட பொதுச் செயலாளர் பாலாஜி, நெ சவாளர் அணி மாநில செயலாளர் சீனிவாச ராகவன் முன்னிலை வகித்தனர்.

நகரத் தலைவர் பாலசுப்பிரமணியன், கன்னியாகுமரி பெருங்கோட்ட விவசாய அணி பொறுப்பாளர் சுரேஷ்குமார், மாவட்ட துணைத் தலைவர் உமாசெல்வி, மாவட்ட செயலாளர் கோமதி, மகளிரணி செயலாளர் சித்ரா, நகர பொதுச் செயலாளர் முனியராஜ், செய்தி தொடர்பு பிரிவு மாவட்டத் தலைவர் னிவாசன் உட்பட பலர் பங்கேற்றனர். அவர்களுடன் கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் கஸ்தூரி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாலசுப்பிரமணியன், சீனிவாசன், கிழக்கு காவல் ஆய்வாளர் சுஜித் ஆனந்த் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன்பின் பாஜகவினர் கலைந்து சென்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x