Published : 12 Oct 2021 03:14 AM
Last Updated : 12 Oct 2021 03:14 AM

பாம்பனில் மீனவர்கள் இறுதி அஞ்சலி - மீனவர் சங்க தலைவர் அருளானந்தம் உடல் நல்லடக்கம் :

மாரடைப்பால் காலமான தேசிய பாரம்பரிய மீனவர் சங்கத் தலைவர் அருளானந்தம் உடல் நேற்று நல்லடக்கம் செய்யப்பட்டது. திர ளான மீனவர்கள் இறுதி அஞ் சலி செலுத்தினர்.

ராமேசுவரம் அருகேயுள்ள பாம் பனைச் சேர்ந்தவர் அருளானந்தம் (75), தேசிய பாரம்பரிய மீனவர் சங்கத் தலைவராகவும், இந்திய-இலங்கை அப்பாவி மீனவர்கள் விடுதலைக் கூட்டமைப்பின் ஒருங் கிணைப்பாளராகவும் இருந்தார். நேற்று முன்தினம் காலை மார டைப்பால் காலமானார்.

இவரது மறைவுக்கு முதல் வர் ஸ்டாலின், முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ் ணன், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா உள்ளி ட்டோர் இரங்கல் தெரிவித்தனர்.

பாம்பனில் உள்ள அருளா னந்தம் வீட்டில் பொது மக்களும், மீனவர்களும் கட்சியினரும் அஞ்சலி செலுத்துவதற்காக அவ ரின் உடல் வைக்கப் பட்டிருந்தது. அங்கு தமிழகத்தின் கடலோர மாவட்டங்களிலிருந்து மீனவப் பிரதிநிதிகள் பலர் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர்.

நேற்று காலை 11 மணியளவில் பாம்பனில் உள்ள ஆரோக்கிய அன்னை ஆலயத்தின் கல்லறைத் தோட்டத்துக்கு ரதத்தில் அருளானந்தத்தின் உடல் ஊர் வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. அப்போது திரளான மீனவர்கள் ஊர் வலமாக மயானத்துக்குச் சென்று இறுதி அஞ்சலி செலுத்தினர். பின்னர் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x