Published : 12 Oct 2021 03:14 AM
Last Updated : 12 Oct 2021 03:14 AM

ஆசிரியர் பணிக்கான வயது வரம்பை : உயர்த்தக் கோரிய மனு தள்ளுபடி :

ஆசிரியர் பணிக்கான வயது வரம்பை அதிகரிக்கக்கோரி தாக்கல் செய்த மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

புதுக்கோட்டை வல்லத்திரக் கோட்டையைச் சேர்ந்த எஸ்.தவமணி, தேனி கீழவடகரை யைச் சேர்ந்த எம்.பால முருகன், ஆகியோர் உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: நாங்கள் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் முது நிலை பட்டதாரி ஆசிரியர்களாக நியமிக்க தகுதி பெற்றுள்ளோம். தமிழகத்தில் 2012 வரை வேலை வாய்ப்பு அலுவலக பணி மூப்பு அடிப்படையில் ஆசிரியர்கள் நியமனம் நடைபெற்று வந்தது.

இந்நிலையில் தமிழக அரசு 2012-ல் எழுத்துத்தேர்வு மற்றும் பணி அனுபவத்துக்கான கருணை மதிப்பெண் அடிப்படையில் நேரடியாக ஆசிரியர்களை தேர்வு செய்ய தமிழக அரசு கொள்கை முடிவெடுத்தது. இந்த நியமன முறையில் 57 வயது வரை உள்ளவர்களும் ஆசிரியர்களாக தேர்வு செய்யப்பட்டனர்.

இந்த சூழலில் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் நேரடி நியமனத்துக்கு பொதுப்பிரி வினருக்கு அதிகபட்ச வயதாக 40 ஆகவும், இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு அதிகபட்ச வய தாக 45 ஆகவும் நிர்ணயம் செய்த அரசு 30.1.2020-ல் அரசாணை பிறப்பித்துள்ளது. தற்போது எங்களுக்கு முறையே 49, 48 வயதாகிறது. இந்த அர சாணையால் எங்களால் நேரடி ஆசிரியர் தேர்வுக்கு விண்ணப் பிக்க முடியாத நிலை உள்ளது.

தமிழகத்தில் நேரடி முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம் தொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியம் 9.9.2021-ல் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதில் 45 வயதுக்குள் உட்பட்டவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண் டும் எனக் கூறப்பட்டுள்ளது. அரசு பாலிடெக்னிக், அரசு கலைக் கல்லூரி ஆசிரியர்கள் தேர்வுக்கு அதிகபட்ச வயது வரம்பாக 57 இருக்கும் போது பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்துக்கு அதிகபட்ச வயதாக 45 நிர்ணயம் செய்திருப்பது சட்டவிரோதம்.

எனவே, அதிகபட்ச வயது வரம்பு அடிப்படையில் நேரடி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் நியமனம் மேற்கொள்ள தடை விதித்தும், அதிகபட்ச வயது வரம்பு நிர்ணய அரசாணை செல் லாது என அறிவித்தும், எங்களை நேரடி நியமனத்தில் பங்கேற்க அனுமதிக்கவும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் எம்.துரைசுவாமி, கே.முரளிசங்கர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. விசாரணைக்குப் பின்னர் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x