Published : 12 Oct 2021 03:14 AM
Last Updated : 12 Oct 2021 03:14 AM

கன்னியாகுமரியில் நவராத்திரி விழா - காமதேனு வாகனத்தில் பகவதி அம்மன் பவனி :

கன்னியாகுமரி பகவதிஅம்மன் கோயிலில் 10 நாள் நவராத்திரி திருவிழா கடந்த 6-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. 9 நாள் கொலுமண்டபத்தில் தவமிருக்கும் பகவதி அம்மன் 10-ம் நாளான விஜயதசமியன்று மகாதானபரம் வேட்டை மண்டபத்தில் பாணாசூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெறும்.

கரோனா கட்டுப்பாடுகளால் சமூக இடைவெளியை பின்பற்றி குறைந்த அளவு பக்தர்கள் பங்களிப்புடன் இவ்விழா நடைபெற்று வருகிறது. 5-ம் நாள் திருவிழாவான நேற்று முன்தினம் இரவு அலங்கரிக்கப்பட்ட வெள்ளி காமதேனு வாகனத்தில் மலைமகளாக பகவதிஅம்மன் எழுந்தருளி கோயில் வெளிப்பிரகாரத்தை பவனி வந்தார். அப்போது பக்தர்கள் தேவாரப் பாடல் பாடியவாறு வலம் வந்தனர். பின்னர் தாலாட்டுப் பாடலுடன், நாதஸ்வர இசை முழங்க பவனி நிறைவடைந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x