Published : 11 Oct 2021 03:12 AM
Last Updated : 11 Oct 2021 03:12 AM

2022 ஹஜ் பயண ஏற்பாடுகள் 100% டிஜிட்டல்மயம் :

ஆண்டுதோறும் மெக்கா வுக்கு புனிதப் பயணம் செல்வது முஸ்லிம்களின் வழக்கமாக உள்ளது. இந்தோனேசியாவை அடுத்து மெக்காவுக்கு இந்தி யாவில் இருந்துதான் அதிக அளவில் முஸ்லிம்கள் புனிதப் பயணம் செல்கின்றனர். இந்நிலையில் மும்பையில் உள்ள ஹஜ் ஹவுஸில் ஹஜ் பயணத்துக்கான ஆன்-லைன் முன்பதிவு வசதியை நேற்று முன்தினம் மத்திய அமைச்சர் நக்வி தொடங்கி வைத்தார்.

அப்போது அவர் கூறும் போது,‘‘2022 முதல் ஹஜ் பயண ஏற்பாடுகள் 100 சதவீதம் டிஜிட்டல் மயமாக்கப்படும். கரோனா பரவல் காரணமாக 2020, 2021 ஆண்டில் ஹஜ் பயணம் ரத்து செய்யப்பட்டது. 2022-ல் ஹஜ் புனிதப் பயணம் செல்வதில் பிரச்சினை இருக்காது என எண்ணுகிறேன்’’ என்று தெரிவித்தார். - பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x