Published : 11 Oct 2021 03:14 AM
Last Updated : 11 Oct 2021 03:14 AM

கிணற்றில் விழுந்த 4 மான்கள் மீட்பு :

பர்கூர் அருகே நாய்கள் விரட்டியதால் கிணற்றில் தவறி விழுந்த 4 புள்ளிமான்களை வனத்துறையினர் உயிருடன் மீட்டனர்.

பர்கூர் வட்டம் தொகரப்பள்ளி வனப்பகுதியை ஒட்டியுள்ளது சீனிவாசபுரம். இப்பகுதியைச் சேர்ந்த விவசாயி ராமசாமி என்பவருக்குச் சொந்தமான புளியந்தோப்பில் சுமார் 100 அடி ஆழ கிணறு உள்ளது. வனத்தில் இருந்து தண்ணீர் தேடி அப்பகுதிக்கு நேற்று வந்த 4 புள்ளி மான்களை நாய்கள் விரட்டியது. இதனால், மிரண்டு ஓடிய மான்கள் புளியந்தோப்பில் உள்ள கிணற்றில் தவறி விழுந்தன.

தகவல் அறிந்து அங்கு சென்ற வனத்துறையினர் மற்றும் பர்கூர் தீயணைப்பு நிலைய அலுவலர் செங்குட்டுவன் தலைமையிலான குழுவினர் வலைகள் உதவியுடன் 4 மான்களையும் மீட்டனர். பின்னர் மான்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு அவை தொகரப்பள்ளி காப்புக்காட்டில் விடுவிக்கப்பட்டன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x