Published : 08 Oct 2021 03:11 AM
Last Updated : 08 Oct 2021 03:11 AM

நாடு முழுவதும் பிஎம் கேர்ஸ் நிதியில் நிறுவப்பட்ட - 1,224 ஆக்சிஜன் உற்பத்தி நிலையம் திறப்பு : 35 இடங்களில் பிரதமர் மோடி காணொலி மூலம் திறந்துவைத்தார்

தமிழகத்தில் 70 இடங்கள் உட்பட நாடு முழுவதும் பிஎம் கேர்ஸ் நிதியில் நிறுவப்பட்டுள்ள 1,224 ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்கள் நேற்று திறக்கப்பட்டன. இவற்றில் 35 இடங்களில் பிரதமர் நரேந்திர மோடி காணொலி மூலம் திறந்துவைத்தார்.

இந்தியாவில் கரோனா வைரஸ் 2-வது அலை மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தியது. தினசரி கரோனா பாதிப்பு எண்ணிக்கை 4 லட்சத்தை கடந்தது. இதில் பெரும்பாலான நோயாளிகள் மூச்சுத் திணறலால் கடுமையாக அவதிப்பட்டனர். மருத் துவமனைகளில் ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக நோயாளிகள் உயிரிழக்க நேர்ந்தது.

இதையடுத்து, நாடு முழுவதும் உள்ள பல்வேறு தொழிற்சாலைகளில் மருத்துவ ஆக்சிஜனை உற்பத்தி செய்து மருத்துவமனைகளுக்கு வழங்க மத் திய அரசு உத்தரவிட்டது. மேலும், பிஎம் கேர்ஸ் நிதி மூலம் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் மருத்துவ ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்கள் நிறுவப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்திருந்தார்.

அதன்படி, நாடு முழுவதும் பிஎம் கேர்ஸ் நிதியில் நிறுவப்பட்டுள்ள 1,224 ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்கள் நேற்று திறந்து வைக்கப்பட்டன. உத்தராகண்ட் மாநிலம் ரிஷி கேஷில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் நடந்த நிகழ்ச்சியில் பங் கேற்ற பிரதமர் மோடி, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் தலா ஒன்று வீதம் 35 ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்களை காணொலி காட்சி மூலம் திறந்துவைத்தார். இதில், சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் நிறுவப்பட்டுள்ள ஆக்சிஜன் உற்பத்தி நிலையமும் ஒன்று.

மற்ற இடங்களில் அமைக்கப்பட் டுள்ள ஆக்சிஜன் உற்பத்தி நிலையங் களை அந்தந்த பகுதியில் அமைச்சர் கள், எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள் மற்றும் அதிகாரிகள் திறந்துவைத்தனர். தமிழகத்தில் மட்டும் நேற்று 70 இடங்களில் ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்கள் திறக்கப்பட்டன.

இதன்மூலம் நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் ஆக்சி ஜன் உற்பத்தி நிலையங்கள் நிறுவப் பட்டுள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. தற்போது திறக் கப்பட்ட 1,224 நிலையங்களில் 1,100-க்கும் மேற்பட்ட நிலையங்கள் நாளொன்றுக்கு 1,750 டன் ஆக்சிஜனை உற்பத்தி செய்யும் திறன் வாய்ந்தவை ஆகும்.

100 கோடியை தாண்டும்

இந்நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:

கரோனா பெருந்தொற்றை எதிர்த்துப் போரிட இந்தியா வில் குறுகிய காலத்தில் பல்வேறு கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக, தொற்றுக்கு முன்பு நாட்டில் ஒரேயொரு பரிசோதனை மையம் மட்டுமே இருந்தது. இப்போது, சுமார் 3 ஆயிரம் மையங்கள் நிறுவப் பட்டுள்ளன. இது நம் நாட்டின் திறமையை வெளிப்படுத்துவதாக உள்ளது.

இந்தியாவில் கரோனா 2-வது அலை தாக்கியபோது மருத்துவ ஆக்சிஜனுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதையடுத்து, ஆக்சிஜன் உற்பத்தியை 10 மடங்கு அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. சுகா தாரத் துறை மற்றும் தொழில் துறையினரின் கடின உழைப்பால் இந்தப் பிரச்சினையை வெற்றிகரமாக சமாளிக்க முடிந்தது.

இந்தியாவில் செயல்படுத்தப்படும் கரோனா தடுப்பூசி திட்டம், உலகின் மிகப்பெரிய மற்றும் அதிவேகமான திட்டமாகும். இதுவரை 93 கோடி டோஸ் தடுப்பூசி செலுத் தப்பட்டுள்ளது. விரைவில் 100 கோடி யைத் தாண்டும்.

எய்ம்ஸ் மருத்துவமனைகள்

பாஜக ஆட்சிக்கு வருவதற்கு முன்பு நாட்டில் 6 எய்ம்ஸ் மருத்துவமனைகள் மட்டுமே இருந்தன. இது இப்போது 22 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. அனைத்து மாநிலங்களிலும் எய்ம்ஸ் மருத்துவமனையை நிறுவ நட வடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதுபோல மாவட்டந்தோறும் மருத் துவக் கல்லூரியை நிறுவவும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு பிரதமர் தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் உத்தராகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி, மத் திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண் டவியா உள்ளிட்டோர் பங்கேற்றனர். நாடு முழுவதும் சுகாதார கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த பிரதமர் மோடி நடவடிக்கை எடுத்து வருவதாக அவர்கள் பாராட்டு தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x