Published : 08 Oct 2021 03:11 AM
Last Updated : 08 Oct 2021 03:11 AM

ஜே.பி. நட்டா வெளியிட்டார் - பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர்கள் அறிவிப்பு :

பாஜகவின் முக்கிய முடிவுகளை கட்சியின் தேசிய செயற்குழு எடுக்கும். இக்குழுவில் பிரதமர் மோடி உட்பட 80 உறுப்பினர்கள் உள்ளனர். இந்நிலையில், புதிய தேசிய செயற்குழு உறுப்பினர்கள் பட்டியலை கட்சி தலைவர் ஜே.பி. நட்டா நேற்று அறிவித்தார்.

இந்தப் புதிய குழுவில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், கட்சியின் மூத்த தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். மத்திய அமைச்சரவையில் புதிதாக சேர்க்கப்பட்ட அஸ்வினி வைஷ்ணவ் செயற்குழு உறுப்பின ராக நியமிக்கப்பட்டுள்ளார். முன்னாள் மத்திய அமைச்சர்கள் ஹர்ஷ் வர்தன், ரவிசங்கர் பிரசாத், பிரகாஷ் ஜாவடேகர் ஆகியோர் செயற்குழு உறுப்பினர்களாக தொடர்ந்து நீடிக்கின்றனர்.

மேலும், வழக்கமாக உள்ள 80 செயற்குழு உறுப்பினர்களைத் தவிர, 50 சிறப்பு அழைப்பாளர்கள் பெயர்களையும், 179 நிரந்தர அழைப்பாளர்கள் பெயர்களையும் ஜே.பி. நட்டா அறிவித்துள்ளார். இதில் பாஜகவின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த தலைவர் கள், கட்சியின் மூத்த நிர்வாகிகள், எம்.பி.க்கள் இடம் பெற்றுள்ளனர். முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தேசிய செயற்குழு உறுப்பினராக நிய மிக்கப்பட்டுள்ளார். செயற்குழு சிறப்பு அழைப்பாளர்களாக பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா, நடிகை குஷ்பு ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேனகா, வருண் நீக்கம்

தேசிய செயற்குழு உறுப்பின ராக இருந்துவந்த கட்சியின் எம்.பி. வருண் காந்தி அப்பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டிருக்கிறார். புதிய செயற்குழு உறுப்பினர்கள் பட்டியலில் அவரது பெயர் இடம்பெறவில்லை. அவரது தாயாரும் முன்னாள் மத்திய அமைச்சருமான மேனகா காந்தியும் செயற்குழு உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள் ளார். உ.பி. லக்கிம்பூரில் நடந்த வன்முறையில் விவசாயிகள் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக வருண் காந்தி தொடர்ந்து கடும் விமர்சனம் செய்து வந்த நிலையில், பாஜக தேசிய செயற்குழுவில் இருந்து அவர் நீக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

எனினும், ‘‘தேசிய செயற் குழுவில் உறுப்பினர்கள் நீக்கப்படுவதும் புதியவர்கள் நியமிக்கப்படுவதும் வழக்கமானதுதான். வருண் காந்தியின் விமர்சனத்துக்கும் அவரது நீக்கத்துக்கும் தொடர்பு இல்லை’’ என்று பாஜக கூறியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x