Published : 07 Oct 2021 03:12 AM
Last Updated : 07 Oct 2021 03:12 AM

சமையல் காஸ் சிலிண்டர் விலை ரூ.15 உயர்வு : ஒரே ஆண்டில் ரூ.300 உயர்ந்ததால் இல்லத்தரசிகள் கவலை

சென்னை

வீட்டு உபயோகத்துக்கான சமையல் காஸ் சிலிண்டர் விலை ரூ.15உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த ஓராண்டில் மட்டும் காஸ் விலைரூ.300 உயர்ந்துள்ளதால் இல்லத்தரசிகள் கவலை அடைந்துள்ளனர்.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றைக் கணக்கில்கொண்டு, எண்ணெய் நிறுவனங்கள் சமையல் காஸ் சிலிண்டர் விலையை மாதம்தோறும் மாற்றி அமைத்து வருகின்றன.

கடந்த ஆண்டு டிசம்பரில் ரூ.610

கடந்த ஆண்டு டிசம்பர் ஆரம்பத்தில் வீட்டு உபயோக காஸ்சிலிண்டரின் விலை ரூ.610 ஆகஇருந்தது. அதே மாதத்தில் ரூ.50உயர்த்தப்பட்டு ரூ.660 ஆக உயர்ந்தது. பின்னர், இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் இருந்து சிலிண்டர் விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருகிறது. பிப்.4-ம் தேதி ரூ.25-ம்,பிப்.15-ம் தேதி ரூ.50-ம் உயர்த்தப்பட்டன. பிப்.25-ம் தேதி மறுபடியும் ரூ.25 உயர்த்தப்பட்டது. அடுத்து, மார்ச் 1-ம் தேதி ரூ.25 உயர்த்தப்பட்டது. இதன்படி, ஒருமாதத்துக்குள் சிலிண்டர் விலை ரூ.125 அதிகரிக்கப்பட்டது. பின்னர்,ஏப்.1-ம் தேதி சிலிண்டர் விலை ரூ.10குறைக்கப்பட்டது. அதன்பிறகு பலமுறை விலை உயர்த்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், எண்ணெய் நிறுவனங்கள் தற்போது ரூ.15 உயர்த்தி உள்ளன. அதன்படி, சென்னையில் கடந்த மாதம் ரூ.900.50-க்கு விற்பனையான வீட்டு சமையல் காஸ் சிலிண்டர், தற்போது ரூ.15அதிகரித்து ரூ.915.50 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஓராண்டில் மட்டும் சமையல் காஸ் சிலிண்டர் ரூ.300 உயர்ந்துள்ளது. தொடர்ந்து அதிகரித்து வரும் விலை உயர்வால் இல்லத்தரசிகள் மிகுந்த கவலை யடைந்துள்ளனர்.

பெட்ரோல், டீசல் விலை உயர்வு

இதற்கிடையே, பெட்ரோல், டீசல் விலையையும் எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தி உள்ளன. அதன்படி, சென்னையில் நேற்று பெட்ரோல் ஒரு லிட்டருக்கு 26 காசுகள் அதிகரித்து ரூ.100.49-க்கும், டீசல் லிட்டருக்கு 34 காசுகள்அதிகரித்து ரூ.95.93-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

சென்னையில் கடந்த மாதம்ரூ.900.50-க்கு விற்பனையான வீட்டு சமையல் காஸ் சிலிண்டர், தற்போது ரூ.15 அதிகரித்துரூ.915.50 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x