Published : 07 Oct 2021 03:13 AM
Last Updated : 07 Oct 2021 03:13 AM

பள்ளி ஆசிரியர் பணிக்கானவயதுவரம்பை நீக்க வேண்டும் : பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல்

பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்றுவெளியிட்ட அறிக்கை:

அரசு மேல்நிலைப் பள்ளிகளில்காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்காக 2,207 முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களை தேர்ந்தெடுப்பதற்கான அறிவிக்கையை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. இதில் 42 வயதைக் கடந்த பட்டதாரிகள் பங்கேற்க முடியாது என்று அறிவிக்கப்பட்டிருப்பது சமூக அநீதியாகும்.

விரிவுரையாளர் பணிக்கு எந்த வயது வரம்பும் நிர்ணயிக்கப்படாத நிலையில், முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கு மட்டும் வயதுவரம்பு நிர்ணயிப்பது எந்த வகையிலும் நியாயமற்றது. இன்றைய சூழலில் முதுநிலைப் பட்டமும், இளநிலை கல்வியியல் பட்டமும் பெறுவதற்கே 25 முதல் 28 வயது வரை ஆகிவிடும். அடுத்த 14 ஆண்டுகளில் அதிகபட்சமாக 3 அல்லது 4 முறை மட்டும் தான் முதுநிலை பட்டதாரி நியமனம் நடைபெறும். அதற்குள்ளாக அனைவருக்கும் வாய்ப்பு கிடைப்பதென்பது சாத்தியமல்ல.

லட்சக்கணக்கானோர் கனவு

தமிழகத்தில் முதுநிலை ஆசிரியர் பணிக்கான கல்வித் தகுதியைப் பெற்றவர்களில் லட்சக்கணக்கானோர் 42 வயதைக் கடந்தவர்கள். அவர்களின் கனவை ஒற்றை ஆணையில் கலைப்பது நியாயமல்ல.

எனவே, லட்சக்கணக்கான பட்டதாரிகளின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு, ஆசிரியர் பணிக்கு வயது வரம்பு நிர்ணயித்து கடந்த ஆண்டு பிறப்பிக்கப்பட்ட ஆணையை தமிழ்நாடு அரசு ரத்து செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித் துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x