Published : 05 Oct 2021 03:11 am

Updated : 05 Oct 2021 03:11 am

 

Published : 05 Oct 2021 03:11 AM
Last Updated : 05 Oct 2021 03:11 AM

செப்டம்பர் 12-ம் தேதி நடந்த - நீட் தேர்வு ரத்து கோரிய மனு உச்ச நீதிமன்றம் தள்ளுபடி :

புதுடெல்லி

எம்பிபிஎஸ் உள்ளிட்ட மருத்துவ இளநிலை படிப்புகளுக்கு இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு கடந்த செப்டம்பர் 12-ம் தேதி நாடு முழுவதும் நடந்தது. இந்தத் தேர்வு வெளிப்படையாகவும் நியாயமாகவும் நடக்கவில்லை என்றும் தேர்வை ரத்து செய்து மீண்டும் தேர்வு நடத்த வேண்டும் என்று கோரியும் 20 வயதான மாணவர் சலோனி என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் எல். நாகேஸ்வர ராவ், பி.ஆர்.கவாய் ஆகியோர் கொண்ட பெஞ்ச் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் நினட் டோக்ரா, நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் மோசடி தொடர்பாக சிபிஐ 3 வழக்குகள் பதிவு செய்திருப்பதாகவும் வினாத்தாள் வாட்ஸ் அப் மூலம் கசிந்ததாகவும் தெரிவித்தார்.

வழக்கை விசாரித்த நீதிபதிகள் மனுவை தள்ளுபடி செய்தனர். நீதிபதிகள் தீர்ப்பில் கூறியதாவது:

நாடு முழுவதும் லட்சக்கணக்கான மாணவர்கள் நீட் தேர்வு எழுதி உள்ளனர். சிபிஐ 3 எப்ஐஆர் பதிவு செய்திருப்பதால் லட்சக்கணக்கான மாணவர்கள் எழுதியுள்ள தேர்வை ரத்து செய்ய முடியாது. இதுபோன்ற மனு அபராதத்துடன் தள்ளுபடி செய்யப்படும் என்று மனுதாரர் தன்னிடம் வரும் போதே அவரிடம் வழக்கறிஞர் சொல்லக் கூடாதா? ஒட்டு மொத்த தேர்வையும் ரத்து செய்ய வேண்டும் என்று விரும்புகிறீர்களா? இந்த மனுவை ஏற்க முடியாது. மனுவை தள்ளு படி செய்கிறோம்.

இவ்வாறு நீதிபதிகள் தெரி வித்தனர். -பிடிஐ




Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x