Published : 05 Oct 2021 03:11 AM
Last Updated : 05 Oct 2021 03:11 AM

வேளாண் சட்டங்களுக்கு தடை விதித்த பிறகு எதற்காக போராட்டம்? : விவசாய சங்கங்களிடம் உச்ச நீதிமன்றம் கேள்வி

வேளாண் சட்டங்களுக்கு தடை விதித்த பிறகு எதற்காக போராட்டம் என்று விவசாய சங்கங்களிடம் உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

கடந்த ஆண்டு செப்டம்பரில் 3 வேளாண் சட்டங்களை மத்திய அரசு நிறைவேற்றியது. இதை எதிர்த்து பஞ்சாப், ஹரியாணா, உத்தர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். டெல்லி எல்லைப் பகுதிகளை விவசாயிகள் முற்று கையிட்டிருப்பதால் டெல்லி, ஹரியாணா, உத்தர பிரதேச மாநில எல்லைப் பகுதிகளில் போக்கு வரத்து முடங்கியுள்ளது.

போக்குவரத்து பாதிப்பு தொடர்பாக பல்வேறு தரப்பினர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த வழக்குசில நாட்களுக்கு முன்பு விசாரணைக்கு வந்தபோது டெல்லி-ஹரியாணா, டெல்லி-உத்தர பிர தேச நெடுஞ்சாலைகளை ஓராண்டாக எப்படி முடக்க முடியும் என்று உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது.

நீதிபதிகள் கேள்வி

இந்த சூழலில் டெல்லி ஜந்தர் மந்தரில் சத்யாகிரகம் போராட்டம் நடத்த அனுமதி கோரி ராஜஸ்தானை சேர்ந்த கிசான் மகா பஞ்சாயத்து சார்பில் தொடரப்பட்ட வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் கான்வில்கர், ரவிகுமார் அமர்வு வழக்கை விசாரித்தது.

அப்போது நீதிபதிகள் கூறியதாவது:

புதிய வேளாண் சட்டங்களுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்திருக் கிறது. 3 சட்டங்களையும் அமல் படுத்தமாட்டோம் என்று மத்திய அரசு உறுதி அளித்துள்ளது. இந்த சூழலில் எதற்காக போராட்டம் என்ற கேள்விக்கு விவசாய சங்கங்கள் பதில் அளிக்க வேண்டும்.

புதிய வேளாண் சட்டங்கள் செல்லுமா, செல்லாதா என்பதை உச்ச நீதிமன்றம் முதலில் முடிவு செய்ய வேண்டும். அதற்கு முன்பாக சட்டங்களை எதிர்த்து போராடுவது ஏன்?

இவ்வாறு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

கிசான் மகா பஞ்சாயத்து சார்பில் மூத்த வழக்கறிஞர் அஜய்சவுத்ரி ஆஜரானார். அவர் கூறும்போது, "3 சட்டங்களை தாண்டி பல்வேறு பிரச்சினைகள் உள்ளன. குறைந்தபட்ச ஆதரவு விலையை சட்டப்பூர்வமாக்க வேண்டும், கோதுமை கொள்முதலில் முறைகேடுகளை தடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்" என்று பதில் அளித்தார்.

நீதிபதி கான்வில்கர் குறுக்கிட்டு பேசியபோது, "மாநில அரசுகளே கோதுமை கொள்முதல் செய்கின் றன. எதற்காக டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த வேண்டும். நீதிமன்றத்தில் சட்டப்போராட்டம் நடத்துவதா அல்லதுசாலையில் போராட்டம் நடத்துவதா? இந்த இரண்டில் ஒன்றை முடிவு செய்ய வேண்டும். விவசாயிகளின் போராட்டத்தால் பொது சொத்துகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது" என்று கண்டித்தார்.

வழக்கறிஞர் அஜய் சவுத்ரி கூறும்போது, "நீதிமன்றத்தில் முறையிடவும் சாலையில் போராட வும் விவசாயிகளுக்கு உரிமை உள்ளது" என்று தெரிவித்தார்.

அடிப்படை உரிமையா?

மத்திய அரசு சார்பில் ஆஜரான அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணு கோபால் கூறும்போது, "விவசாய சங்கங்கள் தொடுத்த வழக்குகளை உச்ச நீதிமன்றம் விசாரித்து வருகிறது. எனவே போராட்டம் நடத்தவிவசாயிகளுக்கு அனுமதி வழங்கக்கூடாது. உத்தர பிரதேசம் லக்கிம்பூர் துரதிஷ்டவசமான சம்பவம் நடந்துள்ளது" என்று தெரிவித்தார்.

இறுதியில் நீதிபதிகள் கான்வில் கர், ரவிகுமார் கூறியதாவது:

லக்கிம்பூர் சம்பவத்துக்கு யாரும்பொறுப்பேற்காதது வருத்தம் அளிக்கிறது. வேளாண் சட்டங்கள் தொடர்பாக கிசான் மகா பஞ்சாயத்து சார்பில் ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப் பட்டுள்ளது.

அந்த வழக்கை உச்ச நீதிமன்றமே விசாரிக்கும். வேளாண்சட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் போராட்டம் நடத்த அனுமதி கோரப் படுகிறது. எனவே போராட்ட உரிமை என்பது அடிப்படை உரிமைகளில் ஒன்றா என்பது குறித்து ஆய்வு செய்யப்படும்.

இவ்வாறு நீதிபதிகள் உத்தர விட்டனர். வழக்கின் அடுத்த விசாரணை வரும் 21-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

43 சங்கங்களுக்கு நோட்டீஸ்

விவசாயிகளின் போராட்டத்தால் ஹரியாணாவில் சாலைப் போக்கு வரத்து முடங்கியுள்ளது. இது தொடர்பாக ஹரியாணா அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கு நீதிபதிகள் சஞ்சய் கிஷண் கவுல், எம்.எம்.சுந்தரேஷ் அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள் கூறும் போது, "மத்திய அரசு, ஹரியாணா, டெல்லி, உத்தர பிரதேச அரசுகள் போக்குவரத்து முடக்கம் பிரச் சினைக்கு தீர்வு காண வேண்டும்" என்று அறிவுறுத்தினர். மேலும் 43 விவசாய சங்கங்களின் தலைவர்களிடம் விளக்கம் கேட்டு நீதிபதிகள் நோட்டீஸ் அனுப்பினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x