Published : 01 Oct 2021 03:18 AM
Last Updated : 01 Oct 2021 03:18 AM

மேஷம்: அரசியல் பிரமுகர்களின் நட்பு கிடைக்கும்

மேஷம்: அரசியல் பிரமுகர்களின் நட்பு கிடைக்கும். இழுபறியாக இருந்த வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். அரசு காரியங்கள் விரைந்து முடியும். புதிய நண்பர்கள் அறிமுகமாவார்கள்.ரிஷபம்: புதிய பாதையில் பயணிக்கத் தொடங்குவீர்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும். உங்கள் ரசனைக்கேற்ப வீடு, வாகனம் அமையும். கணவன் - மனைவிக்குள் மனம்விட்டுப் பேசுவீர்கள்.மிதுனம்: நண்பர்கள் தக்கசமயத்தில் உதவுவார்கள். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள். வீட்டை விரிவுபடுத்தி கட்டுவது குறித்து ஆலோசிப்பீர்கள். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும்.கடகம்: எதிர்மறை சிந்தனை, ஏமாற்றம் வந்து நீங்கும். திட்டமிட்ட காரியங்கள் இழுபறிக்குப் பின்னரே முடியும். எதிலும் நிதானம் தேவை. அநாவசிய பேச்சுக்களைத் தவிர்த்து விடுங்கள்.சிம்மம்: பணப்பற்றாக்குறை, வீண் டென்ஷன் வந்து போகும். உங்களின் முன்கோபத்தால் நல்லவர்களின் நட்பை இழக்க நேரிடும். ஆன்மிகப் பெரியோரின் ஆசி கிட்டும்.கன்னி: விஐபிகள் அறிமுகமாவார்கள். வேற்றுமொழி, மதத்தின ரால் ஆதாயம் உண்டு. குலதெய்வப் பிரார்த்தனைகளை குடும் பத்தினருடன் சென்று நிறைவேற்றுவீர்கள். பணவரவு உண்டு.துலாம்: பழைய பிரச்சினைகளுக்கு சுமுகத் தீர்வு காண்பீர்கள். உறவினர்கள், நண்பர்கள் வீட்டு சுபநிகழ்ச்சிகளை முன்னின்று நடத்துவீர்கள். வழக்கு விவகாரங்கள் வெற்றியைத் தரும்.விருச்சிகம்: கடனைத் தீர்ப்பதற்கான வழிகளை யோசிப்பீர்கள். நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும். தந்தையின் உடல் நலம் சீராகும். விலகியிருந்த சொந்தபந்தங்கள் தேடி வருவார்கள்.தனுசு: யாருக்கும் ஜாமீன், உத்தரவாதக் கையெழுத்திட வேண்டாம். அடுத்தவர் விவகாரங்களில் தலையிடாதீர்கள். மூத்த சகோதரர் வகையில் எதிர்பாராத சங்கடங்கள் ஏற்படக் கூடும்.மகரம்: புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். சமூகத்தில் பிரபல மானவர்களின் நட்பு கிடைக்கும். அரசு காரியங்கள் விரைந்து முடியும். மனைவிவழி உறவினர்களால் ஆதாயம் உண்டு.கும்பம்: மாறுபட்ட அணுகுமுறையால் பழைய பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பீர்கள். பெரிய பதவியில் இருப்பவர்களின் தொடர்பு கிடைக்கும். குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும்.மீனம்: விலகியிருந்த உறவினர்கள் வலிய வந்து பேசுவார்கள். நண்பர்கள் சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். வாகனம் செலவு வைக்கும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x