Published : 01 Oct 2021 03:18 AM
Last Updated : 01 Oct 2021 03:18 AM

புதிய தேசிய சுகாதார கொள்கை வரையறுக்கப்படும் - மாவட்டந்தோறும் மருத்துவக் கல்லூரி : பிரதமர் நரேந்திர மோடி உறுதி

நாட்டில் அனைத்து மாவட்டங்களி லும் ஒரு மருத்துவக் கல்லூரி ஏற் படுத்த மத்திய அரசு உறுதி பூண்டுள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

பாரம்பரிய மருத்துவ முறை களுக்கும் நவீன மருத்துவ முறை களுக்கும் இடையே உள்ள மிகப் பெரிய இடைவெளியை போக்கும் வகையில் புதிய தேசிய சுகாதார கொள்கை வரையறுக்கப்படும் என்றும் பிரதமர் தெரிவித்தார்.

ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் சிபெட் - பெட்ரோ ரசாயனங்கள் தொழில்நுட்ப நிறுவனத்தை பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாக நேற்று திறந்துவைத் தார். மேலும், ராஜஸ்தானின் பன்ஸ் வாரா, சிரோஹி, ஹனுமன்கர், தவுசா மாவட்டங்களில் 4 புதிய மருத் துவக் கல்லூரிகளுக்கும் அவர் அடிக்கல் நாட்டினார். அப்போது பிரதமர் மோடி பேசியதாவது:

கடந்த 100 ஆண்டுகளில் இல் லாத வகையில் மிகப்பெரிய பெருந் தொற்று உலகத்தை உலுக்கி வரு கிறது. கரோனா பெருந்தொற்று மருத்துவத் துறைக்கு புதிய பாடங் களை கற்றுக் கொடுத்து வருகிறது. ஒவ்வொரு நாடும் தங்களது நாட் டின் சூழ்நிலைக்கு ஏற்ப நெருக் கடியை சமாளித்து வருகின்றன. இந்தியாவைப் பொறுத்தவரை சுயசார்பை அதிகரிக்க பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

நாடு முழுவதும் சுகாதாரத் துறை வலுப்படுத்தப்படும். இதற்காக தூய்மை இந்தியா திட்டம், ஆயுஷ் மான் பாரத் மருத்துவ காப்பீடு திட்டம், ஆயுஷ்மான் பாரத் டிஜிட் டல் சுகாதார திட்டம் உள்ளிட்ட பல் வேறு திட்டங்கள் செயல்படுத் தப்படுகின்றன. ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின்கீழ் ராஜஸ்தானில் மட்டும் சுமார் 3.5 லட்சம் பேர் இலவச சிகிச்சை பெற்றுள்ளனர். மாநிலம் முழுவதும் 2,500 ஆரோக் கிய மையங்கள் தொடங்கப் பட்டுள்ளன.

இந்தியாவில் திறன்வாய்ந்த சுகாதார ஊழியர்கள் உள்ளனர். அவர்களின் கடின உழைப்பால், திறமையால் கரோனாவை வெற்றி கரமாக எதிர்கொள்ள முடிந்தது. குறிப்பாக, ‘இலவச தடுப்பூசி, அனைவருக்கும் தடுப்பூசி’ என்ற மத்திய அரசு திட்டம் மிகப்பெரிய வெற்றி பெற்றிருக்கிறது. இதுவரை 88 கோடிக்கும் அதிகமான கரோனா தடுப்பூசிகள் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது.

பெட்ரோலிய, ரசாயன தொழில் கள் வேகமாக வளர்ச்சி அடைந்து வருகின்றன. இந்த துறைகளுக்கு திறன்வாய்ந்த ஊழியர்கள் தேவைப்படுகின்றனர். ஜெய்ப்பூரில் தொடங்கப்பட்டுள்ள சிபெட், பெட்ரோ ரசாயனங்கள் தொழில் நுட்ப நிறுவனம் லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு புதிய வாய்ப்பு களை வழங்கும். சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத எரிசக்திகளை இளைஞர்கள் கண்டுபிடிக்க இதுபோன்ற நிறுவனங்கள் பாதை அமைத்துத் தரும்.

ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் சார்ந்த கட்சியின் கொள்கைகள், எனது கட்சியின் கொள்கைகள் வெவ்வேறானவை. எனினும் முதல்வர் அசோக் கெலாட் என் மீது ஆழ்ந்த நம்பிக்கை வைத்துள்ளார். எங்களது நட்பு இந்திய ஜனநாயகத்தின் வலிமையை எடுத்துரைக்கிறது.

மத்திய அரசு உறுதி

நாடு முழுவதும் மருத்துவக் கல்லூரிகள், சிறப்பு மருத்துவமனை களை அமைக்க மத்திய அரசு உறுதி பூண்டுள்ளது. நாட்டில் 6 எய்ம்ஸ் மருத்துவமனைகள் மட்டுமே செயல்பட்டு வந்த நிலையில், தற்போது 22 எய்ம்ஸ் மருத்துவமனைகள் உருவாக்கப்பட்டுள்ளன.

கடந்த 7 ஆண்டுகளில் 170-க் கும் அதிகமான புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்பட்டுள் ளன. 100 புதிய மருத்துவக் கல்லூரி களுக்கான பணிகள் அதிவேகமாக நடந்து வருகின்றன.

கடந்த 2014-ம் ஆண்டு இளங் கலை, முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான மொத்த இடங் கள் 82 ஆயிரமாக இருந்தது. இந்த எண்ணிக்கை தற்போது 1 லட்சத்து 40 ஆயிரமாக உயர்ந்துள்ளது. நாட் டில் அனைத்து மாவட்டங்களிலும் ஒரு மருத்துவக் கல்லூரி அல்லது மருத்துவ முதுகலை கல்வி நிறுவனத்தை ஏற்படுத்த மத்திய அரசு உறுதி பூண்டுள்ளது.

பல்வேறு சவால்களுக்கு நடு வில் தேசிய மருத்துவ ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. பாரம்பரிய மருத்துவ முறைகளுக்கும் நவீன மருத்துவ முறைகளுக்கும் இடையே மிகப்பெரிய இடைவெளி உள்ளது. இதை போக்கும் வகையில் புதிய தேசிய சுகாதார கொள்கை வரையறுக்கப்படும்.

இவ்வாறு பிரதமர் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x