Published : 30 Sep 2021 07:44 AM
Last Updated : 30 Sep 2021 07:44 AM

கட்டாய மதமாற்றத்தை தடை செய்ய விரைவில் சட்டம் இயற்றப்படும் : கர்நாடகா முதல்வர் பசவராஜ் தகவல்

கர்நாடகா முதல்வர் பசவராஜ் பொம்மை பெங்களூருவில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:

கர்நாடகாவில் பல்வேறு மாவட்டங்களில் இந்துக்கள் கட்டாயப்படுத்தி மதமாற்றம் செய்யப்படுவதாக புகார்கள் வந்துள்ளன. காதல், திருமணம் போன்ற காரணங்களுக்காகவும் மதமாற்றம் செய்யப்படுவதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. இத்தகைய கட்டாய மதமாற்றத்தை எக்காரணம் கொண்டும் அனுமதிக்க முடியாது.

இவற்றை தடுக்குமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கும், காவல்துறை அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டுள்ளேன்.

கட்டாய மதமாற்றத்தை தடுக்கும் வகையில் கர்நாடகாவில் விரைவில் மதமாற்ற தடை சட்டம் கொண்டுவர திட்டமிட்டுள்ளோம். இதுகுறித்து சட்ட நிபுணர்கள், மடாதிபதிகள், பிற மதங்களின் தலைவர்கள் ஆகியோரிடம் அரசு கருத்து கேட்டுள்ளது. உள்துறை அமைச்சர் அரக ஞானேந்திரா இது தொடர்பான சட்ட வரைவை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். முழுமையான வரைவு தயாரானவுடன் அமைச்சரவையில் ஒப்புதல் பெறப்படும்.

இவ்வாறு பசவராஜ் பொம்மை தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x