Published : 29 Sep 2021 03:20 AM
Last Updated : 29 Sep 2021 03:20 AM

பூச்சித் தொல்லை, பருவநிலை மாற்றத்தை தாங்கி வளரும் - நெல், கோதுமை, தானியம் உட்பட 35 புதிய பயிர் வகைகள் அறிமுகம் : பிரதமர் நரேந்திர மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார்

புதிதாக 35 பயிர் வகைகளை காணொலி மூலம் நாட்டுக்கு அர்ப்பணித்து பேசுகிறார் பிரதமர் மோடி.படம்: பிடிஐ

புதுடெல்லி

பூச்சித் தொல்லை, பருவநிலை மாற்றத்தை தாங்கி வளரும், ஊட் டச்சத்து நிறைந்த நெல், கோதுமை, சிறுதானியங்கள் உள்ளிட்ட 35 புதிய பயிர் வகைகளை பிரதமர் நரேந்திர மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

பூச்சித் தொல்லை, பருவ நிலையை தாங்கி வளரும், ஊட்டச் சத்து நிறைந்த 35 புதிய பயிர் வகைகளை இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஏஆர்) உருவாக்கியுள்ளது. நெல், கோதுமை, சோயாபீன், சோளம் உள்ளிட்ட இந்த பயிர் வகைகளின் அறிமுக விழா காணொலி வாயி லாக நேற்று நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று புதிய பயிர்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார். அப்போது அவர் பேசியதாவது:

பருவநிலை மாற்றம், புதிய வகை பூச்சிகள், புதிய நோய்கள், தொற்று நோய்கள் பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்து வரு கின்றன. இதன்காரணமாக மனிதர் கள், கால்நடைகள், பயிர்கள் பாதிக் கப்படுகின்றன. இந்த சவால்களை எதிர்கொள்ள அறிவியல் ஆராய்ச்சி அவசியமாகிறது. அறிவியல், அரசு, சமூகம் இணைந்து செயல்பட்டால் மட்டுமே இத்தகைய சவால்களை சமாளிக்க முடியும்.

நாடு முழுவதும் பூச்சிகளால் பயிர் சாகுபடி கடுமையாக பாதிக்கப் படுகிறது. பல்வேறு மாநிலங்களில் வெட்டுக்கிளி தீராத பிரச்சினையாக நீடிக்கிறது. இதன்காரணமாக விவ சாயிகள் பேரிழப்பை சந்திக்கின்ற னர். இதை தடுக்க விவசாயிகளும் விஞ்ஞானிகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.

கடந்த 7 ஆண்டுகளாக வேளாண் துறையில் நவீன தொழில்நுட்பங் கள் புகுத்தப்பட்டு வருகின்றன. அதேநேரம் நமது பழங்கால வேளாண் மரபுகளும் கண்டிப்புடன் பின்பற்றப்படுகின்றன.

அந்த வகையில் பூச்சிகளை எதிர்த்து, பருவநிலை மாற்றங் களை தாங்கி வளரும் 35 புதிய பயிர் வகைகள் அறிமுகம் செய்யப் பட்டுள்ளன. இவை விவசாயி களுக்கு அதிக மகசூலை அளிக்கும். அதிக ஊட்டச்சத்து நிறைந்த உணவு தானியங்களாகவும் இருக்கும். வேளாண்மையில் புதுமைகளை கடைபிடிக்க விவசாயிகள் தயங் கக்கூடாது. தேவைக்கு ஏற்ற பயிர் வகைகளை விளைவித்து, அவற்றை மதிப்பு கூட்டி விற்பனை செய்ய வேண்டும்.

பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டிருந்த 100 பாசன திட்டங்களை வெற்றிகரமாக நிறை வேற்றியுள்ளோம். இதுவரை 11 கோடி மண் வள அட்டைகள் வழங் கப்பட்டுள்ளன. 2 கோடி கிசான் அட்டைகள் விநியோகிக்கப்பட்டுள் ளன. குறைந்தபட்ச ஆதரவு விலை உயர்த்தப்பட்டுள்ளது. வானிலை நிலவரம் குறித்து விவசாயி களுக்கு முன்கூட்டியே தகவல் தெரிவிக்கப்படுகிறது. விவசாயி களுக்கு வங்கிக் கடன் கிடைப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.

முன்னதாக ஜம்மு - காஷ் மீரைச் சேர்ந்த பெண் விவசாயி ஜைடூன் பேகம், உத்தரபிரதேச விதை உற்பத்தியாளர் குல்வந்த் சிங், கோவா பெண் விவசாயி தர்ஷனா பெடென்கர், மணிப்பூர் விவசாயி தோய்பா சிங், உத்தர காண்ட் விவசாயி சுரேஷ் ராணா ஆகியோரிடம் பிரதமர் கலந் துரையாடினார். அப்போது அவர் களது வேளாண் அனுபவங்களை பிரதமர் கேட்டறிந்தார்.

புதிய நெல் வகைகள்

காணொலி நிகழ்ச்சியின்போது, ராய்பூரில் உள்ள தேசிய உயிர் வாழ்வு நெருக்கடி மேலாண்மை நிறுவனத்தில் புதிதாக கட்டப் பட்ட வளாகத்தை பிரதமர் திறந்து வைத்தார். வேளாண் பல்கலைக்கழகங்களுக்கான பசுமை வளாக விருதையும் அவர் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் பேசும்போது, "விவசாயிகள் சொந்த காலில் நிற்க வேண்டும் என்பதற்காக பி.எம். கிசான் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது" என்றார். இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் இயக்குநர் ஏ.கே.சிங் பேசும்போது, "இந்த நெல் வகைகளுக்கு குறைந்த அளவு தண்ணீர் போதுமானது.ஊட்டச்சத்து நிறைந்த அதிக மகசூல் கிடைக்கும்" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x