Published : 28 Sep 2021 03:18 AM
Last Updated : 28 Sep 2021 03:18 AM

மேஷம்: மனக்குழப்பங்கள் நீங்கி தெளிவான முடிவுகள் எடுப்பீர்கள்

மேஷம்: மனக்குழப்பங்கள் நீங்கி தெளிவான முடிவுகள் எடுப்பீர்கள். வெளிவட்டாரத்தில் மதிப்பு மரியாதை கூடும். வீட்டை ரசனைக்கேற்ப அழகுபடுத்துவீர்கள். பங்கு வர்த்தகத்தில் லாபம் கிடைக்கும்.ரிஷபம்: குடும்பத்தினருடன் மனம்விட்டுப் பேசுவீர்கள். அவர்களின் எண்ணங்களை பூர்த்தி செய்வீர்கள். அரசு காரியங்களில் அனுகூல மான நிலை காணப்படும். திடீர் பயணம் ஏற்படக் கூடும்.மிதுனம்: குடும்பத்தில் உள்ளவர்களைப் பற்றி வெளிநபர்களிடம் குறைகூறி பேச வேண்டாம். நீங்கள் நகைச்சுவைக்காக சொல்லக் கூடிய சில கருத்துகள் கூட சீரியசாக வாய்ப்பிருக்கிறது.கடகம்: விடாப்பிடியாக செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். பிள்ளைகள் கோபப்படுவார்கள். திட்டமிடாத செலவுகளை போராடி சமாளிப்பீர்கள். யாரையும் பகைத்துக் கொள்ள வேண்டாம்.சிம்மம்: முகமலர்ச்சியுடன் காணப்படுவீர்கள். நீண்டநாள் ஆசை களை பூர்த்தி செய்து கொள்வீர்கள். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் ஏற்படும். தந்தையின் உடல்நிலை சீராக இருக்கும்.கன்னி: எதிர்ப்புகள், இழப்புகள், ஏமாற்றங்கள் யாவும் நீங்கும். பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். கணவன் - மனைவி இடையே நிலவிய கருத்துவேறுபாடுகள் முடிவுக்கு வரும்.துலாம்: குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். பிள்ளைகளை நல்வழிப்படுத்துவீர்கள். அவர்களின் எதிர்காலத்தை மனதில் கொண்டு முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். தாயாரின் ஆதரவு உண்டு.விருச்சிகம்: குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்ற போராட வேண்டியிருக்கும். சிலர் உங்களை மட்டம் தட்டிப் பேசினாலும் உணர்ச்சிவசப்பட வேண்டாம். வாகனம் அடிக்கடி செலவு வைக்கும்.தனுசு: புது எண்ணங்கள் தோன்றும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். குடும்பத்தினரிடையே ஒற்றுமை நிலவும். பால்ய நண்பர்களைச் சந்திப்பதன் மூலம் மனநிறைவு கிட்டும்.மகரம்: எதிர்பாராத செலவுகள் வந்தாலும் எதிர்பார்த்த இடத்திலிருந்து பணம் வந்து சமாளிப்பீர்கள். சாதுர்யமாகப் பேசி காரியங்களை விரைந்து முடிப்பீர்கள். ஆன்மிகப் பயணம் ஏற்படும்.கும்பம்: பிள்ளைகளின் எண்ணங்களைக் கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். அரசு காரியங்களில் அனுகூலமான நிலை காணப்படும். விருந்தினர், நண்பர்களின் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி தங்கும்.மீனம்: சகோதரர் வகையில் நன்மை பிறக்கும். புதிய நண்பர்கள் அறிமுகமாவார்கள். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். குடும்பத்தில் நிலவி வந்த கூச்சல், குழப்பம் யாவும் நீங்கும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x