Published : 27 Sep 2021 03:20 AM
Last Updated : 27 Sep 2021 03:20 AM

இந்தியாவில் இருந்து நேரடி விமான சேவைக்கு கனடா அரசு அனுமதி

டொரான்டோ

கரோனா பரவல் காரணமாக இந்தியாவில் இருந்து நேரடி விமான சேவைக்கு கனடா அரசு கடந்த ஏப்ரல் மாதம் தடை விதித்தது. இப்போது கரோனா தொற்று பாதிப்பு குறைந்துள்ள நிலையில், தடையை நீக்கி இந்தியாவில் இருந்து இன்று முதல் நேரடி விமான சேவைக்கு கனடா அரசு அனுமதி அளித்துள்ளது.

இதுகுறித்து கனடா அரசு வெளியிட்ட அறிக்கையில், ‘‘இந்தியாவில் இருந்து நேரடியாக வரும் விமானங்கள் 27-ம் தேதி (இன்று) முதல் கனடாவில் தரையிறங்க அனுமதிக்கப்படும். பயணிகள் கரோனா தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும், பயணத்துக்கு 18 மணி நேரத்துக்கு முன்பாக அங்கீகரிக்கப்பட்ட பரிசோதனை மையத்தில் கரோனா பரிசோதனை செய்து நெகட்டிவ் சான்றிதழ் வைத்திருக்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு வரவேற்பு தெரிவித்து கனடாவிற்கான இந்திய தூதர் அஜய் பிசாரியா ட்விட்டர் பதிவில், ‘‘இரு நாடுகளுக்கு இடையிலான விமான சேவையை இயல்பு நிலைக்கு கொண்டு வருவதற்கான ஆக்கப்பூர்வ நடவடிக்கை இதுவாகும். ஏர் இந்தியா மற்றும் ஏர் கனடா நிறுவனங்கள், இனிமேல் தினசரி டெல்லி - டொரான்டோ மற்றும் வான்கூவர் இடையே விமானங்களை இயக்க முடியும். பயண கட்டுப்பாடுகளை இன்னும் எளிதாக்குவது குறித்து பேச்சுவார்த்தை நடக்கிறது’’ என்று கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x