Published : 27 Sep 2021 03:21 AM
Last Updated : 27 Sep 2021 03:21 AM

ஆஷியானா சுபம் குழுமத்தின் மூத்த குடிமக்கள் குடியிருப்பில் புதிய கிளப் ஹவுஸ் கட்டிடம் திறப்பு :

சென்னை

மறைமலை நகரில் உள்ள ஆஷியானா சுபம் குழுமத்தின் மூத்த குடிமக்கள் குடியிருப்பில் புதிய கிளப் ஹவுஸ் கட்டிடம் திறக்கப்பட்டுள்ளது.

சென்னை மறைமலை நகரில் உள்ள ‘ஆஷியானா சுபம்‘ குழுமம் சார்பில் மூத்த குடிமக்களுக்காக பிரத்யேக குடியிருப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த குடியிருப்பில் 100-க்கும் அதிகமான மூத்தகுடிமக்கள் தங்கள் குடும்பங்களுடன் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் ஆஷியானா சுபம்குழுமம் மற்றும் அரிகண்ட் நிறுவனம் இணைந்து மூத்த குடிமக்களுக்கான குடியிருப்புக்குள் புதியகிளப் ஹவுஸ் ஒன்றை பிரம்மாண்டமாக உருவாக்கியுள்ளது.

இந்த கிளப் ஹவுஸில் நீச்சல் குளம், இசை அறை, உயர்தர உணவகம், சூப்பர் மார்க்கெட், ஓய்வறை விளையாட்டு அரங்கம், பூங்கா, உடற்பயிற்சி கூடம் உள்ளிட்ட பல்வேறு உயர்தர வசதிகள் அமைந்துள்ளன. அதன்படி, கிளப் ஹவுஸ் திறப்பு விழா நிகழ்ச்சி குடியிருப்பு வளாகத்தில் நேற்று மாலை நடைபெற்றது. இதில், சிறப்பு விருந்தினராக காஞ்சிபுரம் திமுக எம்பி க.செல்வம் கலந்து கொண்டு கிளப் ஹவுஸை திறந்து வைத்தார்.

இதைத்தொடர்ந்து செங்கல்பட்டு திமுக எம்எல்ஏ வரலட்சுமி மதுசூதனன், இந்திய ஹாக்கி அணியின் முன்னாள் தலைவரும், அர்ஜூனா விருது பெற்றவருமான வாசுதேவன் பாஸ்கரன், பின்னணி பாடகர் கிருத்திகா பாபு ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி கிளப் ஹவுஸை தொடங்கி வைத்தனர்.

இந்த விழாவில் அரிகண்ட் நிறுவனத்தின் இயக்குநர் பரத் ஜெயின், ஆஷியானா சுபம் குழுமத்தின் இணை மேலாண்மை இயக்குநர் அன்குர் குப்தா, துணை விளம்பரப் பிரிவு இயக்குநர் ஹரிணி, குடியிருப்பு சங்கத்தின் செயலாளர் அனந்த் சுவாமிநாதன் மற்றும் 100-க்கும் அதிகமான மூத்த குடிமக்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியை ஆஷியானா சுபம் குழுமத்தின் துணைத் தலைவர் பீட்டர் சகாயராஜ் தொகுத்து வழங்கினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x