Published : 26 Sep 2021 03:25 AM
Last Updated : 26 Sep 2021 03:25 AM

வாரணாசியில் பிரியங்கா காந்தி பிரச்சாரம் தொடக்கம் :

லக்னோ

உத்தர பிரதேசத்தில் 403 தொகுதிகளை கொண்ட சட்டப் பேரவைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெறுகிறது. ஆளும் பாஜக, சமாஜ்வாதி, காங்கிரஸ், பகுஜன் சமாஜ் என 4 முனைப் போட்டி நிலவுகிறது.

அப்னா தளம், நிஷாத் கட்சி களுடன் கூட்டணி அமைத்து இந்த தேர்தலை பாஜக சந்திக்கிறது. முதல்வர் வேட்பாளராக யோகி ஆதித்யநாத்தையே அக்கட்சி முன்னிறுத்தியுள்ளது. ஆனால், எதிர்க்கட்சிகளின் கூட்டணி முடி வாகவில்லை.

காங்கிரஸ் சார்பில் வாரணாசி யில் அக்டோபர் 9-ம் தேதி மாபெரும் பிரச்சாரப் பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கட்சி பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி இப்பேரணிக்கு தலைமை வகிக்கிறார். மத்திய, மாநில அரசுகளின் மக்கள் விரோத போக்கை சுட்டிக்காட்டி பிரியங்கா காந்தி பேசுவார் என காங்கிரஸ் தேசியச் செயலர் ராஜேஷ் திவாரி கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x