Published : 25 Sep 2021 03:32 AM
Last Updated : 25 Sep 2021 03:32 AM

நாட்டில் புதிதாக 31,382 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று :

மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் நேற்று காலை 8 மணிக்கு வெளியிட்ட புள்ளிவிவரத் தில் கூறியிருப்பதாவது:

கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில் 31,382 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. புதிதாக 318 பேர் உயிரிழந்தனர். நாட்டின் மொத்த உயிரிழப்பு 4.46 லட்சத்தை கடந்துள்ளது.

கரோனா தொற்றில் இருந்து இதுவரை 3.28 கோடி பேர் குணம் அடைந்துள்ள வேளையில் தற்போது 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் சிகிச்சையில் உள்ளனர். நாட்டில் புதிய நோயாளிகள் அதிகம் உருவாகும் மாநிலமாக கேரளா தொடர்கிறது. இம்மாநிலத்தில் புதிதாக 19,682 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் சிகிச்சையில் உள்ளனர்.

மாற்றுத் திறனாளிகள் மற்றும் நடமாட முடியாதவர்களுக்கு அவர்கள் வீட்டுக்கே சென்று கரோனா தடுப்பூசி போடுவதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தடுப்பூசி பணியில் நாட்டில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களில் 66 சதவீதம் பேருக்கு குறைந்தபட்சம் ஒரு டோஸ் செலுத்தப்பட்டுள்ளது. 23 சதவீதம் பேருக்கு 2 டோஸ்களும் செலுத்தப்பட்டுள்ளது. கிராமப் புறங்களில் சுமார் 63 சதவீத டோஸ்களும் நகர்ப்புறங் களில் சுமார் 35 சதவீத டோஸ்களும் செலுத்தப்பட்டுள்ளன.

இவ்வாறு சுகாதாரத் துறை கூறியுள்ளது. இதனிடையே நோய் எதிர்ப்பு சக்தியை தவிர்க்கும் வாய்ப்புகள் குறைந்து வருவதால் கரோனா வைரஸ் பலவீனம் அடையும் என கோவிஷீல்டு தடுப்பூசியை உருவாக்கியவர் கூறியுள்ளார். - பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x