Published : 25 Sep 2021 03:33 AM
Last Updated : 25 Sep 2021 03:33 AM

உள்ளாட்சி தேர்தல் அலுவலர் பயிற்சி :

காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்குச் சாவடியில் பணியாற்ற உள்ள மொத்தம் 5,053 தேர்தல் அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்புகள் காஞ்சிபுரம் மாவட்டத்தில் காஞ்சி, வாலாஜாபாத், உத்திரமேரூர்,பெரும்புதூர், குன்றத்தூர் ஆகிய 5 மையங்களில் நடைபெற்றது.

காஞ்சிபுரம் ஒன்றியத்துக்கு உட்பட்ட கீழம்பியில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்று வரும் தேர்தல் அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பை மாவட்ட ஆட்சியர் மா.ஆர்த்தி ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x