உள்ளாட்சித் தேர்தல் செயல்பாட்டில் அதிருப்தி - 50க்கும் மேற்பட்ட பாமகவினர் அதிமுகவில் இணைந்தனர் :

உள்ளாட்சித் தேர்தல் செயல்பாட்டில் அதிருப்தி -  50க்கும் மேற்பட்ட பாமகவினர் அதிமுகவில் இணைந்தனர் :
Updated on
1 min read

உள்ளாட்சித் தேர்தலில் பாமக எடுத்த முடிவிற்கு அதிருப்தி தெரிவித்து, விழுப்புரத்தில் பாமகவைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் அதிமுகவில் இணைந்தனர்.

விழுப்புரம் வடக்கு மாவட்ட அதிமுக அலுவலகத்தில், அக்கட்சியின் மாவட்ட செயலாளரான முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் முன்னிலையில் பாமகவின் மாநிலத் துணைத் தலைவராக பதவி வகித்த ச.இ.ஏழுமலை தலைமையில், நகர செயலாளர் மலர் சேகர், வழக்கறிஞர் சம்பத், வடபழனி உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோர் அதிமுகவில் இணைந்தனர்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ச.இ.ஏழுமலை, “உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதால் பாமகவின் அடிதட்டு நிர்வாகிகள் ஒன்றிய, மாவட்ட கவுன்சிலர் பதவிகளை பெற வாய்ப்பில்லை. ஒவ்வொரு உள்ளாட்சித் தேர்தலிலும், ‘தனித்துப் போட்டி’ என்று பாமக தலைமை அறிவிக்கிறது. இது எங்களுக்கு மிகுந்த வருத்தத்தை தந்தது. அதிமுக கூட்டணி நல்ல கூட்டணி. இதிலிருந்து வெளியேறியதும் எங்களுக்கு மன வருத்தத்தை அளித்தது.

40 ஆண்டுகளுக்கு முன் நான் ராமதாஸுடன் பணியாற்றுவதற்கு முன்பு அதிமுகவில் இருந்தவன். ராமதாஸின் கொள்கை, செயல்பாடு பிடித்ததால் அவருடன் இணைந்து பணியாற்றினேன். பாமகவில் தொண்டர்களுக்கு மரியாதை இல்லை. இதனால் நாங்கள் அதிமுகவில் இணைந்துள்ளோம்” என்று தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in