Published : 24 Sep 2021 03:23 AM
Last Updated : 24 Sep 2021 03:23 AM

ஒட்டன்சத்திரம் புதிய அரசு கல்லூரியில் இந்த ஆண்டே மாணவர் சேர்க்கை : தற்காலிக கட்டிடத்தை தயார் செய்யும் பணிகள் மும்முரம்

ஒட்டன்சத்திரம் தொகுதியில் அரசு கல்லூரி செயல்பட, தற்காலிகமாக தனியார் கட்டிடத்தை தயார் செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த ஆண்டே மாணவர்கள் சேர்க்கை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற உணவுத்துறை அமைச்சர் அர.சக்கரபாணி, தேர்தலின் போது பல்வேறு வாக்குறுதிகள் அளித்திருந்தார். தொகுதியில் அரசு கல்லூரி, பரப்பலாறு அணை தூர்வாருவது உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றும் விதமாக கடந்த சட்டசபை கூட்டத்தொடரில் இதற்கான அறிவிப்புகள் வெளியாகின. பரப்பலாறு அணையை தூர்வார ரூ.40 லட்சம் நிதி ஒதுக்கப் பட்டுள்ளது இதற்கான பணிகள் விரைவில் தொடங்க உள்ளன.

ஒட்டன்சத்திரம் தொகுதி யில் அரசுக் கல்லூரி அமைக்கப் படும் என அறிவிப்பு வெளியானதை யடுத்து கள்ளிமந்தயம் அருகே சின்னயகவுண்டன்வலசு கிராமத்தில் முன்னர் ஆசிரியர் பயிற்சி பள்ளியாக செயல்பட்டு வந்த தனியார் கட்டிடத்தில் தற்காலி கமாக அரசு கலைக்கல்லூரி செயல் பட திட்டமிடப்பட்டுள்ளது. எனவே இந்த கட்டிடத்தை புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

வகுப்பறை கட்டிடங்களுக்கு தேவையான வசதிகள் ஏற்படுத் தப்படுகின்றன. கட்டிடத்தை சுற்றியுள்ள ஒரு ஏக்கர் பரப்பும் தூய்மைப்படுத்தி கல்லூரிக்கு பயன்படுத்தப்பட உள்ளது. இப்பணிகள் முடிந்தவுடன் இந்த ஆண்டே மாணவர்கள் சேர்க்கை தொடங்க உள்ளது. இங்கு கல்லூரி அமைவதன் மூலம் ஒட்டன்சத்திரம் தொகுதியில் உள்ள கிராமப்புற மாணவ, மாணவிகள் அதிகம் பயன்பெறுவர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x