Published : 23 Sep 2021 03:11 am

Updated : 23 Sep 2021 03:11 am

 

Published : 23 Sep 2021 03:11 AM
Last Updated : 23 Sep 2021 03:11 AM

தமிழகத்தில் ஏற்றுமதியை மேம்படுத்த தனி குழு - ரூ.2,120 கோடியில் புதிய முதலீடுகள் : முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தங்கள் கையெழுத்து

சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று நடந்த தமிழக ஏற்றுமதி மாநாட்டில் ரூ.2,120.54 கோடியில் 24 புதிய தொழில் முதலீடுகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தாகின. இதில் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, தா.மோ.அன்பரசன், தலைமைச் செயலர் வெ.இறையன்பு, ஜெர்மன் தூதரக அதிகாரி கரின் ஸ்டோல், இந்தோ - ஜெர்மன் தொழில் வர்த்தக சபை தலைவர் ரஞ்சித் பிரதாப், தமிழக தொழில் வணிக ஆணையர் சிஜி தாமஸ் வைத்யன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

சென்னை

தமிழகத்தில் ரூ.2,120.54 கோடி முதலீட்டில் 41,695 பேருக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் 24 தொழில் முதலீடுகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங் கள், முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலை யில் கையெழுத்தாகின.

இந்நிகழ்ச்சியில் பேசிய முதல்வர், ஏற்றுமதியை மேம்படுத்த தலைமைச் செயலர் தலைமையில், மாநில ஏற்றுமதி மேம்பாட்டுக் குழு அமைக்கப்படும் என்று தெரிவித்தார்.

நாட்டின் 75-வது சுதந்திர தினத்தை யொட்டி, தமிழக அரசும் மத்திய வணிகத் துறையும் இணைந்து ‘ஏற்றுமதியில் ஏற் றம் - முன்னிலையில் தமிழ்நாடு’ என்ற தமி ழக ஏற்றுமதி மாநாட்டை சென்னை கலை வாணர் அரங்கில் நேற்று நடத்தின. மாநாட் டின் ஒருபகுதியாக, பல்வேறு தொழில் நிறுவனங்களின் தயாரிப்புகளுக்கான கண்காட்சியும் நடத்தப்பட்டது. மாநாடு மற்றும் கண்காட்சியை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

அப்போது, தமிழ்நாடு ஏற்றுமதி மேம் பாட்டுக் கொள்கை மற்றும் குறு, சிறு, நடுத்தர ஏற்றுமதி நிறுவனங்களுக்கான கொள்கைகளை முதல்வர் வெளியிட்டார். மேலும், ரூ.2,120.54 கோடியில் 41,695 பேருக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் 24 தொழில் முத லீடுகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங் கள் முதல்வர் முன்னிலையில் கையெழுத் தாகின.

இதுதவிர, புதிதாக அமைக்கப்பட்டுள்ள பாலிமர் பூங்காவில் 2 தொழில் நிறுவனங் களுக்கு நில ஒதுக்கீட்டு ஆணையை முதல் வர் வழங்கினார். பஞ்சு இறக்குமதிக்கான சந்தைக் கட்டணம் நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, இந்திய பருத்தி கழகம், தமிழகத்தில் முதல்முறையாக பஞ்சுக் கிடங்குகளை அமைக்கிறது. இதற்கான ஆணைகள், தலைமைச் செயலரிடம் முதல்வர் முன்னிலையில் வழங்கப்பட்டது.

தமிழகம் - ஜெர்மனி இடையே முதலீடுகள், தொழில்நுட்ப ஒத்துழைப்பு திட்டங் கள், ஏற்றுமதி வாய்ப்புகள் போன்றவற் றில் இணைந்து செயல்படும் வகையில் குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங் கள் துறையின் எம்-டிஐபிபி நிறுவனம், இந்தோ - ஜெர்மன் தொழில் வர்த்தக சபையுடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. பிளிப்கார்ட், வால்மார்ட் நிறுவனங்களுடனும் எம்-டிஐபிபி ஒப்பந்தம் மேற்கொண்டது.

மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:

இதுபோன்ற மாநாடுகள், கண்காட்சிகள் சென்னையில் மட்டுமின்றி அனைத்து மாவட்டங்களிலும் பரவலாக நடக்க வேண்டும். இன்று, ரூ.2,120.54 கோடி மதிப்பில் 24 திட்டங்களுக்கான ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இதன்மூலம் 41,695 பேருக்கு வேலை கிடைக்கும். சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி, மதுரை, தஞ்சாவூர், தூத் துக்குடி, திருநெல்வேலி என பல்வேறு மாவட்டங்களில் இத்திட்டங்கள் மேற் கொள்ளப்படுகிறது.

நமது தயாரிப்புகள் உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்யப்பட வேண்டும். உலகின் முன்னணி தொழில் நிறுவனங்கள் தமி ழகத்தில் தங்கள் நிறுவனத்தை தொடங்க வேண்டும். தமிழகத்தின் தனித்தன்மை யான பொருட்களுக்கு வெளிநாடுகளில் மிகப்பெரிய வரவேற்பு உள்ளதால், இவற்றை அதிக அளவில் தரம் குறையாமல் தயாரிக்க வேண்டும்.

தமிழகத்தில் ஏற்றுமதியை மேலும் மேம்படுத்த தலைமைச் செயலர் தலைமை யில், மாநில ஏற்றுமதி மேம்பாட்டுக் குழு அமைக்கப்பட உள்ளது. தென் தமிழக தொழில் வளர்ச்சிக்கு ஊக்கமளிக்க, நாட்டிலேயே முதல்முறையாக தூத்துக் குடியில் ஏற்றுமதியை மையமாகக் கொண்ட ‘சர்வதேச அறைகலன் பூங்கா’ (International Furniture Park) தமிழக அரசால் அமைக்கப்படுகிறது.

ஏற்றுமதியாளர்களுக்கு தேவையான உலகத்தரம் வாய்ந்த உள்கட்டமைப்பு வசதிகளுடன், மாநல்லூரில் 6 ஆயிரம் ஏக்கரிலும், தூத்துக்குடியில் 5 ஆயிரம் ஏக்கரிலும் சிப்காட் மூலம் 2 பொருளாதார வேலைவாய்ப்பு பகுதிகளை உருவாக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

திருப்பூர், கரூர், மதுரை, ஆம்பூர், தூத்துக்குடி, பொள்ளாச்சி, காஞ்சிபுரம், சென்னை, கோவை மற்றும் ஓசூர் ஆகிய பத்து ஏற்றுமதி மையங்கள் மேம்படுத் தப்பட உள்ளன.

ஏற்றுமதியாளர்கள் மதிப்புக் கூட்டு பொருட்களை உற்பத்தி செய்வதை ஊக்கு விக்க, தொகுப்புச் சலுகைகள் வழங்க திட்டம் வடிவமைக்கப்படும். ஒவ்வொரு மாவட்டத்திலும் தயாரிக்கப்படும் தனித் துவம் வாய்ந்த பொருட்களை உலக அளவில் சந்தைப்படுத்த, மாவட்ட ஏற்றுமதி மையங்கள் உருவாக்கப்படும். தோல் தொழில்துறைக்கு முக்கியத்துவம் அளிப் பதுடன், தமிழகத்தில், ரூ.406.06 கோடி முதலீட்டில் மேற்கொள்ளப்படும் 10 பொது கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் மேம்பாட்டு திட்டத்துக்கு, 15 சதவீத மானியம் என்ற அளவில் ரூ.60.91 கோடி வழங்க தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது. வேளாண் ஏற்றுமதி சேவை மையம் உருவாக்கவும் தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

இவற்றை செயல்படுத்தும்போது தமிழகம் வளர்ச்சி அடைந்து நாட்டிலேயே சிறந்த மாநிலமாகும் என்பதில் சந்தேகம் இல்லை. தமிழகத்தில் இருந்து, பெரும் பாலான பொருட்கள் சில குறிப்பிட்ட நாடுகளுக்கு மட்டுமே ஏற்றுமதி செய்யப் படுகிறது. உலகத்தின் பல்வேறு பகுதி களில் எல்லாம், ‘Made in India’ என்று சொல்கிறோம், அதுபோல ‘Made in Tamil Nadu’ என்ற குரல் ஒலிக்க வேண்டும் என்பது எங்கள் ஆசை மட்டுமல்ல, லட்சியமும்கூட. அந்த லட்சியத்தை நோக்கியே எங்களின் பயணம் அமைந்திடும்.

இவ்வாறு முதல்வர் பேசினார்.

மாநாட்டில் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, தா.மோ.அன்பரசன், தலை மைச் செயலர் வெ.இறையன்பு, மத்திய அரசின் வணிகத் துறை கூடுதல் செயலர் சஞ்சய் சத்தா. தமிழக தொழில் துறை செயலர் நா.முருகானந்தம், சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் துறை செயலர் அருண் ராய் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.




Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x