Published : 23 Sep 2021 03:11 AM
Last Updated : 23 Sep 2021 03:11 AM

தமிழகத்தில் புதிதாக : 1,682 பேருக்கு : கரோனா பாதிப்பு :

சென்னை

தமிழகத்தில் நேற்று ஆண்கள்959, பெண்கள் 723 என மொத்தம்1,682 பேர் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டனர்.

தமிழகத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26.50 லட்சத்தை கடந்துள்ளது. இளைஞர்கள், முதியவர்கள் உட்பட 35,400 பேர் உயிரிழந்துள்ளனர். பாதிப்பு எண்ணிக்கை 26 லட்சத்து 50,370 ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை 25 லட்சத்து 97,943 பேர் குணமடைந்துள்ளனர். தமிழகம் முழுவதும் 17,027 பேர்சிகிச்சையில் உள்ளனர். நேற்று21 பேர் உயிரிழந்தனர். இதன்மூலம் கரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 35,400 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் 8,453 பேர்இறந்துள்ளனர் என்று தமிழகசுகாதாரத் துறை செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x