Published : 21 Sep 2021 03:19 AM
Last Updated : 21 Sep 2021 03:19 AM

பாரதியார் பல்கலைக்கழகம் நடத்திய - எம்.ஃபில், பி.ஹெச்டி நுழைவுத் தேர்வில் : 2,570 மாணவ, மாணவிகள் தேர்ச்சி :

பாரதியார் பல்கலைக்கழகம் சார்பில், எம்.ஃபில் மற்றும் பி.ஹெச்டி படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு நேற்று நடந்தது. இதில் 2570 பேர் தேர்ச்சி பெற்றனர்.

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தின் கீழ் கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் கல்லூரிகள் உள்ளன. இக்கல்லூரிகளில் எம்.ஃபில் மற்றும் பி.ஹெச்டி படிப்புகள் பகுதி நேரமாகவும், முழு நேரமாகவும் நடத்தப்பட்டு வருகின்றன. நடப்பாண்டில், இப்படிப்புகளில் சேர்வதற்கான நுழைவுத் தேர்வு இணையம் வழியாக நேற்று நடைபெற்றது. 3,205 மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர்.

இதுதொடர்பாக, பல்கலை.யின் நுழைவுத் தேர்வு ஒருங்கிணைப்பாளரும், பேராசிரியருமான ம.இளஞ்செழியன் கூறும்போது,‘‘ கடந்த 17-ம் தேதி இணைய வழியில் மாதிரி நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து, நேற்று நடைபெற்ற நுழைவுத் தேர்வை, மாணவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட பயனர் எண் மற்றும் கடவுச்சொல்லை பயன்படுத்தி எழுதினர். கணிணி வசதி, இணையதள வசதி இல்லாத மாணவர்கள் தடையின்றி தேர்வு எழுத வசதியாக, பல்கலைக்கழகத்தில் உள்ள இணையதள மையம், கணினி பயன்பாடு துறைகளில் 200 கணினிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. காலை 11 மணி முதல் 12.30 மணி வரை தேர்வு நடந்தது. தேர்வு முடிந்ததும் சிறிது நேரத்தில், முடிவுகளும் வெளியிடப்பட்டன. மொத்தம் 2,859 பேர் தேர்வு எழுதியதில், 2,570 பேர் தேர்ச்சி பெற்றனர்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x