Published : 21 Sep 2021 03:20 AM
Last Updated : 21 Sep 2021 03:20 AM

கடந்த ஆட்சியை விட கூடுதல் நெல் கொள்முதல் நிலையங்கள் : முன்னாள் முதல்வர் பழனிசாமிக்கு அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கண்டனம்

தமிழகத்தில் நெல் கொள்முதல் நிலையங்கள் குறைவாக இருப் பதாக முன்னாள் முதல்வர் பழனிசாமி கூறுவது வடிகட்டிய பொய்என அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் தெரிவித்தார்.

தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் நேற்று செய்தியாளர்களிடம் கூறியது:

தமிழகத்தில் நெல் கொள்முதல் நிலையங்கள் குறைவாக உள்ள தாக எதிர்க்கட்சித் தலைவர் பழனி சாமி கூறியுள்ளார். அவர் எங்கு பார்த்தார் எனத் தெரியவில்லை. கடந்த ஆண்டு கடலூர் மாவட்டத் தில் 68 இடங்களில் தான் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டி ருந்தன. தற்போது 114 இடங்களில் திறக்கப்பட்டுள்ளன.

கடந்த ஆண்டு குறுவைப் பட்டத்தில் 50 ஆயிரம் டன் நெல் கொள்முதல் செய்த நிலையில், நடப்பாண்டில், 64 ஆயிரத்து 150 டன் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. திட்டக்குடியில் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு கொள் முதல் செய்யப்படும் நிலையில், அங்கு கொள்முதல் நிலையங்கள் இல்லை எனக் கூறுவதிலிருந்தே அவர் கூறுவது வடிகட்டிய பொய் என்று தெரிகிறது.

கடந்த ஆட்சியை ஒப்பிட்டுப் பார்க்கும்போது, கூடுதல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள் ளதோடு, கூடுதல் விலைக்கு நெல் கொள்முதல் செய்யப்படுவதால், விவசாயிகள் வரத் தொடங்கி யுள்ளனர்.விவசாயிகள் சந்திக்கும் பிரச்சினைகளை அறிந்து தார்பாய் வழங்குகிறோம்.

கடந்த ஆட்சியில் இல்லாத வகையில், துறைசார் அமைச்சர்க ளுடன் கலந்தாய்வு நடத்தி, கொள் முதல் செய்யப்படும் நெல்லை உடனுக்குடன் அரிசி ஆலைகளுக்கு அனுப்பவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருக்கிறோம். இதுபோன்ற பல்வேறு பணிகளை வேளாண் துறை மூலம் செயல்படுத்தி வருகி றோம் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x