Published : 20 Sep 2021 03:19 AM
Last Updated : 20 Sep 2021 03:19 AM

பெற்றோரை இழந்தமாணவர்களுக்கு சிஏ தேர்வில் சலுகை :

கரோனா பாதிப்பால் பெற்றோரை இழந்த மாணவர்களுக்கு சிஏ தேர்வுக் கட்டணம் செலுத்துவதில் இருந்து 3 ஆண்டுகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக இந்திய பட்டய கணக்காளர்கள் பயிற்சி நிறுவனம் (ஐசிஏஐ) வெளியிட்ட அறிவிப்பு:

கரோனா தொற்றால் பெற்றோரை இழந்த மாணவர்கள் சிஏ தேர்வு எழுதுவதற்கு 3 ஆண்டுகள் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டம் 2023 மார்ச் 31-ம் தேதி வரை மட்டுமே அமலில் இருக்கும். இதற்கு விண்ணப்பிக்கும்போது மாணவர்கள் www.icai.org என்ற இணையதளத்தில் உள்ள பதிவுச் சான்றிதழை நிரப்ப வேண்டும். மேலும், தேவையான ஆவணங்கள் மற்றும் பெற்றோரின் அடையாள அட்டை, இறப்புச் சான்று ஆகியவற்றை தாங்கள் படித்த பயிற்சி மையத்தின் பொறுப்பாளர் சான்றொப்பத்துடன் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

இத்தகைய விண்ணப்பங்களின் உண்மைத்தன்மை உறுதி செய்யப்பட்டதும் மாணவர்கள் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு தரப்படும்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x