Published : 18 Sep 2021 03:11 AM
Last Updated : 18 Sep 2021 03:11 AM

முறைகேடுகளை தடுக்க கண்காணிப்பு பிரிவு தொடக்கம் - உரம் தொடர்பான புகார் அளிக்க : தொடர்பு எண்கள் அறிவிப்பு :

உரம் பதுக்கல், தட்டுப்பாடு, கூடுதல்விலைக்கு விற்பனை போன்றவற்றை தடுக்க, மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர்அலுவலகத்தில் ‘உரம் கண்காணிப்பு பிரிவு’ தொடங்கப் பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் 140 தனியார் மற்றும் 125 கூட்டுறவு சங்கவிற்பனையகங்கள் மூலம் பல்வேறுவகையான உரங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இதில், டிஏபி உரங்கள் சரிவர கிடைப்பதில்லை என்றும், உரத் தட்டுப்பாடு இருக்கும்சமயங்களில், சில கடைகளில் கூடுதல் விலைக்கு உரங்கள் விற்கப்படுவதாகவும் விவசாயிகள் புகார் கூறினர்.

இதுதொடர்பாக, மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் சித்ராதேவி கூறும்போது,‘‘ இணை இயக்குநர் அலுவலகத்தில் ‘உரம் கண்காணிப்பு பிரிவு’ தொடங்கப்பட்டுள்ளது. தினமும் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை இந்த பிரிவு இயங்கும். அனைத்து வகை உரங்களின் விற்பனை, விநியோகம் போன்றவற்றில் விவசாயிகளுக்கு ஏற்படும் பிரச்சினைகள் தொடர்பாக விவசாயிகள் நேரிலோ, தொலைபேசி மூலமாகவோ தெரிவிக்கலாம்’’ என்றார். இப்பிரிவு நேற்று முதல் செயல்பாட்டுக்கு வந்துள்ளது.

வேளாண்மைத்துறை அதிகாரி கள் கூறும்போது, ‘‘இணை இயக்குநர் தலைமையில் இப்பிரிவு செயல்படும். தரக்கட்டுப்பாட்டு அதிகாரிமற்றும் வட்டார உதவி இயக்குநர்கள் இப்பிரிவில் இருப்பர். உரம் பதுக்கல், கூடுதல் விலைக்கு விற்பனை, தட்டுப்பாடு, கிடைப்பதில் தாமதம் போன்ற உரம் சார்ந்த விவகாரங்கள் தொடர்பாக விவசாயிகள் இப்பிரிவில் தெரிவிக்கலாம். இணை இயக்குநரை 0422-2432739 என்ற எண்ணிலும், தகவல்மற்றும் தரக்கட்டுப்பாட்டு உதவி இயக்குநரை 99655 88226 என்றஎண்ணிலும் தொடர்பு கொள்ள லாம். மேலும், ஆனைமலை உதவி இயக்குநரை 8637471909, அன்னூர் உதவி இயக்குநரை 94863 20064, காரமடை உதவி இயக்குநரை 99408 71830, கிணத்துக்கடவு உதவி இயக்குநரை 98430 65723, மதுக்கரை உதவி இயக்குநரை 94433 25144, பெரியநாயக்கன்பாளையம் மற்றும் சர்க்கார் சாமக்குளம் உதவி இயக்குநரை 94425 56138, பொள்ளாச்சி வடக்கு உதவி இயக்குநரை 70106 65166 , பொள்ளாச்சி தெற்கு 94424 47948, சூலூர் மற்றும் சுல்தான்பேட்டை உதவி இயக்குநரை 99940 74373, தொண்டாமுத்தூர் உதவி இயக்குநரை 98940 42204 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்” என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x