Published : 18 Sep 2021 03:12 AM
Last Updated : 18 Sep 2021 03:12 AM

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தல் விதி மீறல் - 18 பறக்கும் படைகள் மூலம் கண்காணிப்பு :

உள்ளாட்சித் தேர்தலையொட்டி விழுப்புரம் மாவட்டத்தில் 18 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் கண்காணிக் கப்பட்டுவருவதாக ஆட்சியர் மோகன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட் டுள்ள செய்திக்குறிப்பு:

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தல் வரும் 6 மற்றும் 9-ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடக்கிறது. 28 மாவட்ட கவுன்சிலர்கள், 293 ஒன்றிய கவுன்சிலர்கள், 688 ஊராட்சிமன்றத் தலைவர்கள், 5,088 ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் என மொத்தம் 6,097 பதவிகளுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 15-ம்தேதி தொடங்கியுள்ளது. 22-ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளாகும்.

இதனிடையே, விழுப்புரம் மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிகளை கண்காணிக்கும் வகையில் 18 பறக்கும் படை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. 3 சுழற்சிகளில் 24 மணி நேரமும் ஊரக உள்ளாட்சி அமைப்பு பகுதிகளில் போக்குவரத்து வாகனங்கள் சோதனை மேற்கொள்ளுதல் மற்றும் தேர்தல் நடத்தை விதிகள்பின்பற்றப்படுவதை கண்காணித் தல் போன்ற பணிகள் மேற்கொள் ளப்பட்டு வருகின்றன.

முகையூர், திருவெண்ணைநல் லூர், செஞ்சி மேல்மலையனூர், காணை, கோலியனூர், விக்கிர வாண்டி, வானூர், கண்டமங்கலம் மற்றும் மயிலம், மரக்காணம் ஒன்றியங்களில் 24 மணி நேரமும் 3 சுழற்சிகளில் பறக்கும் படையினர் கண்காணிப்புப் பணியில் ஈடுபட் டுள்ளனர்.

ரூ.50 ஆயிரத்திற்கு மேல் எந்தவொரு ஆவணமும், ஆதாரமின்றி வேட்பாளர்களோ, அவரின் முகவர்களோ அல்லது தொடர்பான நபரோமற்றும் எவருமோ எடுத்துச் செல்வது கண்காணிக்கப்பட்டு வருகின்றன. போஸ்டர்கள் மற்றும் தேர்தல் தொடர்பான பொருட்கள், ரூ.10ஆயிரத்திற்கும் மேற்பட்ட பரிசு பொருட்கள், போதைப் பொருட் கள், மதுபானங்கள் மற்றும்ஆயுதங்கள், வெடிபொருட்கள்மற்றும் தேர்தலின்போது அனுமதி யின்றி வாகனங்கள் பயன்படுத்துவ தையும் கண்காணிக்கும் பணிகளை இக்குழுவால் மேற்கொள் ளப்படுகிறது.

உள்ளாட்சித் தேர்தல் புகார் தெரிவிக்க...

தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில் தேர்தல் தொடர்பான புகார்களை தேர்தல் கட்டுப்பாட்டு அறையை கட்டணமில்லா தொலைபேசி எண்களான 1800 425 7820 மற்றும் 1800 425 1740 ஆகிய எண்களில் தெரிவிக்கலாம்.

கடலூர் மாவட்டத்தில் தேர்தல் தொடர்பாக புகார் தெரிவிக்ககட்டுப்பாட்டு அறையை 04142 - 231234 என்ற தொலைபேசி எண்ணிலும்,1800 425 7818 என்ற இலவச அழைப்பு எண்ணி லும் பொதுமக்கள் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x