Published : 17 Sep 2021 03:11 AM
Last Updated : 17 Sep 2021 03:11 AM

‘ஃபிட் இந்தியா’விநாடி - வினா போட்டி 2.5 கோடி விண்ணப்பம் :

சென்னை

மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சகத்தின் சார்பாக பள்ளிமாணவர்களுக்காக ‘ஃபிட் இந்தியா’ விநாடி வினா போட்டியைத் தேசிய அளவில் ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி, இந்த போட்டிக்கு மொத்தமாக ரூ.3.25 கோடிபரிசுத் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், போட்டியில் மாணவர்களைப் பங்கேற்க ஊக்கமளிக்கும் விதமாக, முதலில் விண்ணப்பிக்கும் 2 லட்சம் மாணவர்களுக்கு விண்ணப்பக் கட்டணத்திலிருந்து விலக்கு அளிக்கப்பட்டது.

இந்நிலையில், விநாடி வினாபோட்டிக்கு 2 கோடியே 55 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். https://fitindia.gov.in/என்ற இணையதளம் வழியாகவரும் அக்.2-ம் தேதி வரை மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x