Published : 17 Sep 2021 03:11 AM
Last Updated : 17 Sep 2021 03:11 AM

ஆன்லைன் முறையில் 'கலா உத்சவ்' போட்டிகள் : புதுவை பள்ளி மாணவர்கள் அக். 13-க்குள் விண்ணப்பிக்கலாம்

ஆன்லைன் முறையில் `கலா உத்சவ்' போட்டிகளில் கலந்து கொள்ளும் மாணவர்களிடம் இருந்து விண்ணங்கள் வரவேற்கப் படுகின்றன.

இதுகுறித்து புதுச்சேரி பள்ளிக்கல்வி இயக்குநர் ருத்ரகவுடு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

மத்திய கல்வி அமைச்சகம் இடைநிலை கல்வி பயிலும் பள்ளி மாணவர்களின் தனித் திறன்களை வெளிக்கொண்டு வரும் வகையில் `கலா உத்சவ்' போட்டிகளை தேசிய அளவில் நடத்தி வருகிறது.

இந்த ஆண்டு கரோனா தொற்று காரணமாக ஆன்லைன் முறையில் `கலா உத்சவ்' போட்டிகளை நடத்த உள்ளது. அதன்படி புதுச்சேரி அரசின் பள்ளிக்கல்வி இயக்ககத்தின் 'சமக்ர சிக்ஷா'வால் தனிநபர் பிரிவில் வாய்ப்பாட்டு, நடனம், இசைக்கருவி மீட்டல் மற்றும் ஓவியம் உட்பட 9 பிரிவுகளில் 4 மாவட்டங்களிலும் போட்டிகள் நடைபெற உள்ளன. மாவட்ட அளவில் முதலிடம் பெறுவோர் மாநில அளவிலும், மாநில அளவில் முதலிடம் பெறுவோர் தேசிய அளவிலும் போட்டிகளுக்குத் தேர்ந்தெடுக்கப்படுவர். புதுச்சேரி பிராந்தியத்தில் உள்ள அரசுப் பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளி மற்றும் தனியார் பள்ளிகளில் 9, 10, 11, 12-ம் வகுப்பு பயிலும் மாணவர்கள் கலந்து கொள்ளலாம்.

மேலும் விவரங்களுக்கு பாஸ்கர் ராசு, நோடல் ஆபிசர் 9442787052, 0413-2225751 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம். மற்றும் 'www.kalautsav.in', 'http://schooledn.puducherry.gov.in' என்ற இணையதளத்திலும் அறியலாம். போட்டிகளுக்கான விதிமுறைகள் மற்றும் நுழைவுப்படிவம் அதே இணையத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப் பங்களை பூர்த்தி செய்து பள்ளித் தலைமையின் கையொப்பத்துடன் மற்றும் உரிய பள்ளியின் வழியாகத்தான் விண்ணப்பப் படிவங்களை சமர்ப்பிக்க வேண்டும். மாணவர்கள் நேரடி யாக சமர்ப்பிக்க இயலாது.

விண்ணப்பப் படிவத்துடன் கலந்து கொள்ளும் போட்டியின் எழுத்து விளக்கம், போட்டி நிகழ்வின் அதிகப்பட்சம் ஐந்து போட்டோக்கள் மற்றும் டிவிடி (mov/mp4) தெளிவான பதிவு (5 நிமிடம் மட்டும்) ஆகியவற்றை இணைத்து சமர்ப்பிக்க வேண்டும். புதுச்சேரி ஜவகர் சிறுவர் இல்லத்தில் விண்ணப்பப் படிவங்களை சேர்க்க வேண்டிய கடைசி நாள் 13.10.2021 மாலை 5 மணி. கடைசி தேதிக்குப்பின் வரும் விண்ணப்பப் படிவங்கள் ஏற்க இயலாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x