Published : 16 Sep 2021 03:12 am

Updated : 16 Sep 2021 03:12 am

 

Published : 16 Sep 2021 03:12 AM
Last Updated : 16 Sep 2021 03:12 AM

பெரும்பாலையில் தீர்த்தக்குடம் ஊர்வலம் :

கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, பெரும்பாலை அடுத்த சோளிகவுண்டனூர் பத்ரகாளியம்மன் கோயிலுக்கு தீர்த்தக்குடம் எடுத்து ஊர்வலமாக சென்ற பக்தர்கள்.

தருமபுரி

பென்னாகரம் வட்டம் பெரும்பாலை அடுத்த சோளி கவுண்டனூரில் பத்ரகாளியம்மன், ஐந்தூர் தூரியம்மன் மற்றும் கருப்பசாமி கோயில் கும்பாபிஷேக விழா இன்று (16-ம் தேதி) நடக்கவுள்ளது. இதையொட்டி, நேற்று தீர்த்தக்குடம் ஊர்வலம் நடந்தது.

ஊர்வலத்தில் காவிரி புனித நீர், முளைப்பாரி, பால்குடம் ஆகியவற்றை தலையில் சுமந்து பக்தர்கள் பங்கேற்றனர். தீர்த்தக்குடம் ஊர்வலம் 2 கிமீ தூரம் நடந்தது. இதையொட்டி, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.சாணாரப்பட்டி, பெத்தானூர், ஆலமரத்தூர், பூதநாயக்கன்பட்டி, சோளிகவுண்டனூர், ரோணிப்பட்டி உள்ளிட்ட ஊர்களைச் சேர்ந்த பக்தர்கள் திரளாக பங்கேற்றனர்.




Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x