Published : 16 Sep 2021 03:14 AM
Last Updated : 16 Sep 2021 03:14 AM

திருப்பத்தூர் மாவட்ட எஸ்.பி.,யாக : டாக்டர் பாலகிருஷ்ணன் பொறுப்பேற்பு :

பாலகிருஷ்ணன்.

திருப்பத்தூர்: திருப்பத்தூர் எஸ்.பி.,யாக பணியாற்றி வந்த சிபி சக்கரவர்த்தி சென்னை சைபர் க்ரைம் பிரிவுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து, சென்னை கிழக்கு மாவட்ட போக்குவரத்து பிரிவு துணை ஆணையராக பணியாற்றி வந்த டாக்டர் பாலகிருஷ்ணன் திருப்பத்தூர் எஸ்.பி.,யாக நியமிக்கப்பட்டார்.

இதனைத்தொடர்ந்து, டாக்டர் பால கிருஷ்ணன் திருப்பத்தூர் மாவட்ட எஸ்பியாக நேற்று காலை பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு, துணை காவல் கண்காணிப்பாளர்கள், காவல் ஆய்வாளர்கள், உதவி காவல் ஆய்வாளர்கள், எஸ்.பி., அலுவலக ஊழியர்கள் உட்பட பலர் வாழ்த்து தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x