Published : 15 Sep 2021 03:10 AM
Last Updated : 15 Sep 2021 03:10 AM

பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான - தரவரிசை பட்டியல் வெளியீடு : சிறப்புப் பிரிவு கலந்தாய்வு இன்று தொடங்குகிறது

பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியல் இணையதளத்தில் நேற்று வெளியிடப்பட்டது. 13 மாணவர்கள் 200-க்கு 200 கட் ஆப் மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளனர். சிறப்பு பிரி வினருக்கான கலந்தாய்வு இன்று (புதன் கிழமை) தொடங்குகிறது.

தமிழகத்தில் பொறியியல் கல்லூரி களில் இருக்கும் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் கலந்தாய்வு மூலம் நிரப்பப்படுகின்றன. நடப்பு கல்வியாண்டில் 440 கல்லூரிகளில் உள்ள ஒரு லட்சத்து 51 ஆயிரத்து 870 இடங்கள் அரசு ஒதுக்கீட்டுக்குக் கிடைத்தது. இதில் சேர ஒரு லட்சத்து 74 ஆயிரத்து 930 மாணவர்கள் இணையவழியில் விண்ணப்பித்தனர்.

ஆனால், அவர்களில் ஒரு லட்சத்து 42 ஆயிரத்து 323 பேர் மட்டுமே தங்களின் சான்றிதழ்களை இணையதளத்தில் பதிவேற்றினர். அவர்களில் தகுதியின்மை காரணமாக 3290 பேரின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. எஞ்சிய ஒரு லட்சத்து 39 ஆயிரத்து 33 பேரின் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டன. அவர்களில் 87 ஆயிரத்து 291 பேர் மாணவர்கள், 51,730 பேர் மாணவிகள். 12 பேர் மூன்றாம் பாலினத்தவர்கள்.

இந்நிலையில், பொறியியல் படிப் புக்கு விண்ணப்பித்த தகுதியான மாணவர்களின் தரவரிசை பட்டியலை தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் நேற்று காலை இணையதளத்தில் வெளியிட்டது. பொதுப்போட்டியில் 13 பேர் 200-க்கு 200 கட் ஆப் மதிப்பெண் எடுத்து முதல் இடத்தை பிடித்துள்ளனர்.

முதல்கட்டமாக அரசுப் பள்ளி மாண வர்கள், மாற்றுத் திறனாளி, விளையாட்டு வீரர்கள், முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகள் ஆகியோருக்கான சிறப்புப் பிரிவு கலந்தாய்வு செப்.17-ம் தேதி தொடங்குவதாக முன்பு அறிவிக்கப்பட்டி ருந்தது. ஆனால், தற்போது சிறப் புப் பிரிவு கலந்தாய்வு இன்று (15-ம் தேதி) தொடங்கும் என அறிவிக்கப் பட்டுள்ளது. பொதுப்பிரிவு கலந் தாய்வு 27-ம் தேதி தொடங்கு கிறது. கலந்தாய்வில் அரசுப் பள்ளி மாணவர்கள் 15 ஆயிரத்து 660 பேர் கலந்து கொள்கின்றனர். அரசுப் பள்ளி பிரிவில் மாணவர் விஸ்வநாதன் 197.9 கட் ஆப் எடுத்து முதல் இடத்தை பிடித்துள்ளார். 2-வது இடத்தில் சண்முகவேலும் (197.53), 3-ம் இடத்தில் கவிதா வும் (197.19) உள்ளனர்.

இந்நிலையில், பொறியியல் மாணவர் சேர்க்கை தொடர்பாக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பொன்முடி தலைமைச் செயலகத்தில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

1.55 லட்சம் இடங்கள்

அண்ணா பல்கலைக்கழக கல்லூரிகள், உறுப்பு கல்லூரிகள், அரசு உதவி பெறும் கல்லூரிகள், தனியார் சுயநிதி கல்லூரிகள் என மொத்தம் 440 பொறியியல் கல்லூரி களில் இருந்து ஒரு லட்சத்து 55 ஆயிரத்து 870 இடங்கள் பொது கலந்தாய்வு மூலமாக நிரப்பப்பட உள்ளன. தனியார் பொறியியல் கல்லூரிகள் தங்களிடம் உள்ள மொத்த இடங்களில் 65 சதவீத இடங்களை கலந்தாய்வுக்கு வழங்கியுள்ளன. மீத முள்ள 35 இடங்கள் வழக்கம்போல் நிர்வாக ஒதுக்கீட்டின்கீழ் அவர்களே நிரப்பிக்கொள்வர். சிறுபான்மையினர் கல் லூரிகள் 50 சதவீத இடங்களை கலந்தாய்வுக்கு வழங்கிவிடுவார்கள். எஞ்சிய 50 சதவீத இடங்களை அவர்களே நிரப்பிவிடுவர்.

பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியல் இணையவழியில் வெளியிடப்பட்டிருக்கிறது. இதைத் தொடர்ந்து, தரவரிசை அடிப்படையில் மாணவர்களுக்கான இணையவழி கலந்தாய்வும் நடத்தப்பட இருக்கிறது. சிறப்பு கலந்தாய்வு 15-ம் தேதி (இன்று) தொடங்குகிறது. இணையவழி கலந்தாய்வில் தங்களுக்கு விருப்பமான கல்லூரி மற்றும் பாடப்பிரிவை வரிசையில் குறிப்பிட்டு தேர்வு செய்துகொள்ளலாம்.

பொறியியல் படிப்பில் இந்த ஆண்டு முதல்முறையாக அரசு பள்ளி மாணவர் களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு நடை முறைப்படுத்தப்பட உள்ளது. இந்த ஒதுக் கீட்டின் கீழ் 11,390 இடங்கள் உள்ளன. அவற்றுக்கு 15,660 பேர் விண்ணப்பித்துள் ளனர். இந்த 7.5 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் தேர்வுசெய்யப்படும் மாணவர்களுக்கான கல்லூரி ஒதுக்கீட்டு ஆணையை சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் 18-ம் தேதி அன்று முதல்வர் வழங்க இருக்கிறார். காலியிடங்களை உடனுக்குடன் நிரப்பும் வகையில் இந்த ஆண்டு கலந்தாய்வை 5 கட்டங்களாக நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

விண்ணப்பித்து தகுதி பெற்ற மாண வர்களின் எண்ணிக்கையை காட்டிலும் இடங்கள் அதிகமாக இருப்பதால் அனைத்து மாணவர்களுக்கும் இடம் கிடைக்கும். தரவரிசையை பொருத்து, பிடித்தமான கல்லூரி, பாடப்பிரிவு கிடைக் கும். புதிதாக 21 அரசு கலை அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும் என்று சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது. நடப்பு கல்வி ஆண்டில் அக்கல்லூரிகளை தொடங்குவது சிரமம். அடுத்த கல்வி ஆண்டில் இருந்து புதிய அரசு கலை கல்லூரிகள் செயல்படத்தொடங்கும்.

இவ்வாறு அமைச்சர் பொன்முடி கூறினார்.

பேட்டியின்போது, உயர் கல்வி்த் துறையின் முதன்மைச் செயலர் டி.கார்த்திகேயன், தொழில்நுட்பக் கல்வி ஆணை யர் லட்சுமி பிரியா, பொறியியல் மாணவர் சேர்க்கை செயலர் டி.புருஷோத்தமன் ஆகியோர் உடனிருந்தனர்.

இணையவழி கலந்தாய்வு கால அட்டவணைசிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வுசெப்.15 முதல் 24 வரைபொது கலந்தாய்வு (அகடமிக், தொழிற்கல்வி)செப்.27 முதல் அக்.5 வரைதுணை கலந்தாய்வுஅக்.19 முதல் 23 வரைஎஸ்சி (அருந்ததியர்) பிரிவில் இருந்து எஸ்சி பிரிவுக்கு மாற்றப்படும் இடங்களுக்கான கலந்தாய்வுஅக்.24, 25முதல்கட்ட கலந்தாய்வு நிறைவுஅக்.25

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x