Published : 15 Sep 2021 03:10 AM
Last Updated : 15 Sep 2021 03:10 AM

மாணவியின் மரணத்துக்கு முதல்வர், தலைவர்கள் இரங்கல் :

நீட் தேர்வை எழுதிய அரியலூர் மாணவி கனிமொழி நேற்று தற்கொலை செய்துகொண்டார். அவரது மறைவுக்கு, முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை:

முதல்வர் மு.க.ஸ்டாலின்: நீட் தேர்வு அச்சத்தால் அரியலூர் மாணவி கனிமொழி பலியாகியிருப்பது அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது. தமிழ்நாடு மாணவர்களின் மருத்துவக் கனவை சிதைக்கும் நீட் தேர்வை தொடக்கம் முதலே எதிர்த்து வருகிறோம். அதற்கான சட்டப் போராட்டத்தையும் முழுவீச்சில் தொடங்கி இருக்கிறோம். உயிர்காக்கும் மருத்துவப் படிப்புக்காக, தற்கொலை செய்து உயிர்விடும் அவலத்தைதடுத்திடுவோம். மாணவி கனிமொழியின் குடும்பத்துக்கு இரங்கல் தெரிவித்துக் கொள்கிறேன்.

எதிர்கட்சித் தலைவர் பழனிசாமி: அரியலூர் மாணவி கனிமொழியின் இழப்பே நீட்டுக்கான நமது கடைசி இழப்பாக இருக்கட்டும். நீட் பயத்தால் மாணவர்கள் உயிரிழப்பதை திமுக வேடிக்கை பார்ப்பதை நிறுத்திவிட்டு, மாணவர்களின் நலன் கருதி உண்மை நிலையை மக்களுக்கும், மாணவர்களுக்கும் விளக்க வேண்டும்.

இதேபோன்று, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர்செல்வம், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, தமாகா தலைவர் ஜி.கே.வாசன், பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ், மநீம தலைவர் கமல்ஹாசன் உள்ளிட்டோரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x