Published : 15 Sep 2021 03:11 AM
Last Updated : 15 Sep 2021 03:11 AM

பி.ஆர்க் படிப்புக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் :

இளநிலை ஆர்கிடெக் (பி.ஆர்க்) படிப்புக்கு ஆன்லைனில் வரும் 19-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று சென்டாக் நிர்வாகம் அறிவித்துள்ளது.

நீட் அல்லாத இளநிலை தொழில்முறை படிப்பு பி.ஆர்க் சேர்க்கைக்காக புதுச்சேரி யூனியன் பிரதேசத்தைச் சேர்ந்த தேர்வர்களிடமிருந்து ஆன்லைன்விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 2021-22-ம்கல்வியாண்டுக்கு விண்ணப்பதாரர்கள் தங்கள் ஆன்லைன் விண்ணப்பத்தை www.centacpuducherry.in மூலம் சமர்ப்பிக்கலாம். விண்ணப்பத்தை வரும் 19-ம் தேதி மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். நீட் அல்லாத தொழில்முறை படிப்புகளுக்கு ஏற்கெனவே விண்ணப்பித்திருக்கும் விண்ணப்பதாரர்கள் மற்றும் புதிய விண்ணப்பதாரர்கள் நாடா (NATA) மதிப்பெண் அடிப்படையில் தங்கள் தகுதியை மதிப்பிட்ட பிறகு விண்ணப்பிக்கலாம்.

ஏற்கெனவே விண்ணப்பித்த விண்ணப்பதாரர்களுக்கு எஸ்எம்எஸ் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு சென்டாக் இணையதளத்தை பார்க்கலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x