Published : 14 Sep 2021 03:13 AM
Last Updated : 14 Sep 2021 03:13 AM

மேஷம்: தொலைநோக்குச் சிந்தனையுடன் செயல்படுவீர்கள்

மேஷம்: தொலைநோக்குச் சிந்தனையுடன் செயல்படுவீர்கள். சந்தர்ப்ப சூழ்நிலையறிந்து செயல்படும் சாமர்த்தியத்தை கற்றுக் கொள்வீர்கள். செலவுகளை கட்டுப்படுத்த திட்டமிடுவீர்கள்.ரிஷபம்: சவாலான காரியங்களையும் சாதுர்யமாக நிறைவேற்றிக் காட்டுவீர்கள். அடுக்கடுக்காக செலவுகள் வந்தாலும் அதற்கேற்ற வருமானமும் உண்டு. திடீர் பயணம் ஏற்படக் கூடும்.மிதுனம்: புதிய பாதையில் பயணிக்கத் தொடங்குவீர்கள். திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் கிட்டும். நம்பிக்கைக்குரியவர்களின் அறிமுகம் கிடைக்கும். தாயார் ஆதரவாக இருப்பார்.கடகம்: உங்கள் செயலில் வேகம் கூடும். அரசால் அனுகூலம் உண்டாகும். விஐபிகளின் உதவியுடன் சில காரியங்களை விரைந்து முடிப்பீர்கள். பங்கு வர்த்தகத்தில் எதிர்பாராத லாபம் கிடைக்கும்.சிம்மம்: பிள்ளைகளின் பிடிவாதப்போக்கு தளரும். உங்கள் ஆலோசனையை குடும்பத்தினர் அனைவரும் ஏற்றுக் கொள் வார்கள். மகளுக்கான திருமண முயற்சிகள் கைகூடி வரும்.கன்னி: கவுரவப் பதவிகள் தேடி வரும். மனைவிவழியில் ஆதரவு அதிகரிக்கும். வேலைக்காக காத்திருந்தவர்களுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும். அரசால் அனுகூலம் உண்டாகும்.துலாம்: சவாலான காரியங்களையும் எளிதில் முடித்துக் காட்டுவீர்கள். தடைகள் யாவும் நீங்கும். எதிர்காலத்தை கருத்தில் கொண்டு முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். வாகனம் செலவு வைக்கும்.விருச்சிகம்: கடன் பிரச்சினைகளைத் தீர்க்க வழி பிறக்கும். விருந்தினர் வருகையால் குடும்பத்தில் குதூகலமான சூழ்நிலை உருவாகும். ஆடை, ஆபரணங்கள் வாங்கி மகி்ழ்வீர்கள்.தனுசு: ஓய்வெடுக்க முடியாதபடி வேலைச்சுமை அதிகரிக்கும். பூர்வீகச் சொத்துப் பிரச்சினைகள் மீண்டும் தலைதூக்கும். மூத்த சகோதரரால் சில காரியங்கள் நிறைவேறும்.மகரம்: குடும்பத்தில் சுபச் செலவுகள் அடுத்தடுத்து ஏற்படும். விருந்தினர், உறவினர் வருகை அதிகரிக்கும். ஆன்மிகப் பயணம் செல்ல திட்டமிடுவீர்கள். வீடு பராமரிப்பு செலவுகள் ஏற்படும்.கும்பம்: சாதிக்க வேண்டுமென்ற எண்ணம் அதிகரிக்கும். சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள்.மீனம்: உங்களின் நிர்வாகத் திறன், ஆளுமைத் திறன் அதிகரிக்கும். வேலைக்கு விண்ணப்பித்துக் காத்துக் கொண்டிருந்தவர்களுக்கு நல்ல சம்பளத்துடன் உத்தியோகம் கிடைக்கும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x