Published : 13 Sep 2021 03:13 AM
Last Updated : 13 Sep 2021 03:13 AM

மேஷம்: திடீர் பயணம், அலைச்சல், செலவுகள் இருக்கும்

மேஷம்: திடீர் பயணம், அலைச்சல், செலவுகள் இருக்கும். நீங்கள் நல்லது சொல்லப்போய், சிலர் தவறாகப் புரிந்துகொள்வார்கள். உடல்நலத்தில் கவனம் தேவை. பொருட்கள் சேரும்.ரிஷபம்: தடைகள், இடையூறுகளைப் பொருட்படுத்தாமல் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். உற்சாகம், தோற்றப் பொலிவு கூடும். அந்தஸ்து உயரும். குடும்பத்தில் நல்லது நடக்கும்.மிதுனம்: புதிய நபர்களால் திடீர் திருப்பம் உண்டாகும். நீண்ட நாளாக எதிர்பார்த்துக் காத்திருந்த வெளிநாட்டுப் பயணம் சாதகமாக அமையும். அனைவரையும் அரவணைத்துச் செல்வீர்கள்.கடகம்: தொழில், வியாபார நுணுக்கங்களை அறிந்துகொள்வீர்கள். நீண்ட நாள் பிரச்சினைகளுக்கு சுமுகத் தீர்வு காண்பீர்கள். ஆன்மிகம், யோகா, தியானத்தில் மனம் லயிக்கும்.சிம்மம்: உங்கள் பேச்சில் உற்சாகமும், செயலில் வேகமும் கூடும். பழைய வீட்டை புதுப்பிக்கும் முயற்சியில் இறங்குவீர்கள். பணப் பற்றாக்குறை இருந்தாலும் சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள்.கன்னி: போட்டி, சவால்கள், விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். மன இறுக்கம் நீங்கி, உற்சாகம் அடைவீர்கள். விஐபிகள் மத்தியில் செல்வாக்கு கூடும். வழக்கில் சாதகமான திருப்பம் வரும்.துலாம்: தடைபட்டிருந்த வேலைகளை, உங்கள் மாறுபட்ட அணுகுமுறையால் முடித்துக் காட்டுவீர்கள். விலகிச் சென்ற உறவினர்கள் தேடி வந்து பேசுவார்கள். பண வரவு உண்டாகும்.விருச்சிகம்: மறைமுக அவமானம் ஏற்படக்கூடும். கோயில் நிகழ்ச்சிகள், திருப்பணிகளை முன்னின்று நடத்துவீர்கள். பழைய கடன் சுமையை நினைத்து அவ்வப்போது வருந்துவீர்கள்.தனுசு: திடீர் பயணங்கள், ஆழ்ந்த உறக்கமின்மை வந்து செல்லும். அரசு, வங்கி விவகாரங்களில் அதிக கவனம் தேவை. உடன்பிறந்தவர்களால் தேவையற்ற சங்கடங்கள் வந்து நீங்கும்.மகரம்: பிரபலங்களுடன் நெருக்கம் ஏற்படும். இழுபறியாக இருந்த பழைய வழக்கில் சாதகமான நிலை ஏற்படும். பங்குச் சந்தை வகையில் ஆதாயம் உண்டு. முக்கிய பதவிகள் தேடி வரும்.கும்பம்: உறவினர் மத்தியில் அந்தஸ்து உயரும். பால்ய நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். சுப நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வீர்கள். உங்கள் பேச்சாற்றல், நிர்வாகத் திறன் அதிகரிக்கும்.மீனம்: நினைத்த காரியங்கள் நிறைவேறும். கல்வியாளர்கள், அறிஞர்களின் நட்பால் குழப்பங்கள் நீங்கி தெளிவு பெறுவீர்கள். குடும்பத்தில் அடுத்தடுத்து சுப நிகழ்ச்சிகள் ஏற்பாடாகும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x