Published : 09 Sep 2021 03:13 AM
Last Updated : 09 Sep 2021 03:13 AM

மேஷம்: அதிரடியாகத் திட்டங்களை தீட்டுவீர்கள்

மேஷம்: அதிரடியாகத் திட்டங்களை தீட்டுவீர்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும். உங்களை தேடிவந்து சிலர் உதவி கேட்பார்கள். ஆன்மிகவாதிகளின் சந்திப்பு நிகழும்.ரிஷபம்: முகப்பொலிவு கூடும். அதிகாரப்பூர்வமாக செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள்.மிதுனம்: பளிச்சென்று பேசி எல்லோரையும் கவருவீர்கள். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். வருங்காலத்துக்கான முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். கலைப்பொருட்கள் சேரும்.கடகம்: வெளிவட்டாரத்தில் மதிப்பு உயரும். தைரியமான முடிவு களை எடுத்து வெற்றி காண்பீர்கள். விலகியிருந்த உறவினர்கள், நண்பர்கள் மீண்டும் வருவார்கள். தாயாரின் ஆதரவு கிடைக்கும்.சிம்மம்: மனக்குழப்பங்கள் விலகும். விருந்தினர் வருகையால் குதூகலம் காணப்படும். குடும்பத்தினரின் எண்ணங்களைப் பூர்த்தி செய்வீர்கள். ஆன்மிகப் பயணம் செல்வீர்கள்.கன்னி: சின்னச் சின்ன கவலைகள் வந்து போகும். நீங்கள் ஒன்று பேசப் போய் மற்றவர்கள் அதை வேறுவிதமாகப் புரிந்து கொள்வார்கள். எனவே நிதானமுடன் செயல்படுங்கள்.துலாம்: விடாப்பிடியாக செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். குடும்பத்தினரை அனுசரித்து செல்லுங்கள். அடுத்தடுத்த செலவு களை சமாளிக்க முடியாமல் திணறுவீர்கள்.விருச்சிகம்: வெளியூரிலிருந்து உறவினர்கள், நண்பர்களின் வருகையுண்டு. ஆடம்பரச் செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். மனதுக்குப் பிடித்தவர்களை சந்திப்பீர்கள்.தனுசு: உறவினர்கள் மத்தியில் மதிப்பு உயரும். மூத்த சகோதரர் வகையில் நன்மை பிறக்கும். உற்சாகமான பேச்சால் அனைவரையும் கவருவீர்கள். வீடு, வாகனத்தை சீரமைப்பீர்கள்.மகரம்: சோர்வு நீங்கி சுறுசுறுப்படைவீர்கள். சிந்தனைத் திறன் அதிகரிக்கும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். பங்கு வர்த்தகத்தில் லாபம் கிடைக்கும். திடீர் பயணம் ஏற்படும்.கும்பம்: அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுடன் அனுசரித்து செல்லுங்கள். எதற்கெடுத்தாலும் அடுத்தவர்களை குறை கூறுவதை நிறுத்துங்கள். சாலையை கடக்கும்போது கவனம் தேவை.மீனம்: புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். கணவன் - மனைவிக் குள் நிலவிய கருத்துவேறுபாடுகள் நீங்கும். உறவினர்கள், நண்பர்களின் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி தங்கும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x