Published : 07 Sep 2021 03:13 AM
Last Updated : 07 Sep 2021 03:13 AM

முன்னணி நாடுகளில் உற்பத்தி அதிகரிப்பு - ஏழை நாடுகளுக்கு 50 கோடி தடுப்பூசிகள் : செப்டம்பர் இறுதிக்குள் நன்கொடையாக வழங்கப்பட வாய்ப்பு

அமெரிக்கா, இங்கிலாந்து, ஐரோப்பிய நாடுகள், கனடா மற்றும் ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் தடுப்பூசி உற்பத்தி அதிகரித்ததால் செப்டம்பர் இறுதிக்குள் ஏழை நாடுகளுக்கு 50 கோடி உபரி தடுப்பூசிகள் விநியோகம் செய்யப்படும் எனக் கூறப்படுகிறது.

கரோனா பாதிப்பை எதிர்கொள்ள ஒவ்வொரு நாடும் தீவிரமுயற்சிகளை மேற்கொண்டுவந் தன. தடுப்பூசிதான் தொற்றை தடுக்க ஒரே வழி என்ற நிலையில் உற்பத்தி அதிகரிப்பதில் அதிக கவனம் செலுத்தின. இந்நிலையில் அந்தந்த நாடுகளுக்குத் தேவையான உற்பத்திக்கு மேல் தடுப்பூசி தயாரிப்பு நிறுவனங்கள் உற்பத்தியை மேற்கொண்டுவருகின் றன. இதனால் உபரி தடுப்பூசிகள் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. இவற்றை உலகின் ஏழை நாடுகளுக்கு வழங்க நாடுகள் முன்வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுதொடர்பாக இங்கிலாந்தை சேர்ந்த ஏர்ஃபினிட்டி என்ற அறிவியல் தகவல் மற்றும் பகுப்பாய்வு நிறுவனம் ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த ஆய்வறிக்கையை சர்வதேச மருந்து உற்பத்தியாளர்கள் மற்றும் சங்கங்களின் கூட்டமைப்பு அங்கீகரித்துள்ளது.

இந்த ஆய்வறிக்கை யின்படி தற்போது 50 கோடி உபரி தடுப்பூசிகள் விநியோகத்துக்குத் தயாராக உள்ளன. மேலும் இந்த ஆண்டுஇறுதிக்குள் உபரி தடுப்பூசி 120 கோடி அளவுக்கு இருக்கும். இந்தஉபரி தடுப்பூசிகள் ஏழை நாடுகளுக்கு நன்கொடையாக வழங்கப்பட வாய்ப்புள்ளது என அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

இதுகுறித்து ஏர்ஃபினிட்டி நிறுவனத்தின் சிஇஓ ராஸ்மஸ் பெக் ஹான்சென் கூறும்போது, ‘உலக நாடுகள் தற்போது தடுப்பூசி தேவை மற்றும் உற்பத்தியின் உச்ச நிலையை எட்டிவிட்டன. மேற்கத்திய நாடுகளின் தற்போதைய சவால் தடுப்பூசி சப்ளை அல்ல மாறாக தடுப்பூசிக்கான டிமாண்ட். தடுப்பூசி உபரி உற்பத்தி அதிகரித்துள்ளதால் இனியும் சேமித்துவைக்கக் கூடிய அவசியம் இல்லை. தற்போது பிற நாடுகளுக்கு விநியோகம் செய்ய வேண்டிய சூழலில் மேற்கத்திய நாடுகள் உள்ளன’ என்றார்.

600 கோடி உற்பத்தி

ஏர்ஃபினிட்டியின் அறிக்கையின்படி இதுவரை 600 கோடிதடுப்பூசிகள் உற்பத்தி ஆகியுள்ளன. தடுப்பூசி உற்பத்தியாளர்கள் மாதத்துக்கு 150 கோடி தடுப்பூசிகள் உற்பத்தி திறனுடன் இருக்கிறார்கள். இது தொடர்ந்து அதிகரித்தும் வருகிறது. மேலும் புதியதடுப்பூசிகளும் ஒப்புதல் தரப்பட்டுசந்தைக்கு வந்துகொண்டிருக் கின்றன. இந்நிலையில் உலகின் மொத்த ஜனத்தொகைக்கும் தடுப்பூசி செலுத்த 2021 இறுதிக்குள் 11.3 பில்லியன் தடுப்பூசிகள் தேவையாகும் என ஏர்ஃபினிட்டி கணித்துள்ளது. - பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x